↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
60 ஆவது பிலிம் பேர் விருது வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் வித்யா பாலன், சல்மான் கான், இலியானா, மாதுரி தீட்சித், கஜோல், தபு என்று மிகப்பெரிய நட்சத்திர பட்டளமே கலந்து கொண்டது.
இதில் சிறந்த நடிகருக்கான விருது காஷ்மீர் பிரச்சினையை மையமாகக் கொண்ட 'ஹெய்டர்’ படத்தில் நடித்த ஷாகித் கபூருக்கு வழங்கப்பட்டது. விஷால் பரத்வாஜ் இயக்கியுள்ள இப்படத்தின் கதை காஷ்மீரின் மோசமான காலகட்டமான 1995 ஆம் ஆண்டை சித்தரிக்கிறது.
உலகப்புகழ்பெற்ற ஷேக்ஸ்பியரின் ’ஹேம்லட்’ கதையின் கருவை எடுத்துக் கொண்டு அதை இந்திய அரசியலில் பொருத்திய விதம் அனைவராலும் பாராட்டப்பட்டது.
சிறந்த நடிகைக்கான விருது ’குயின்’ படத்தில் நடித்த கங்கணா ரணாவத்திற்கு வழங்கப்பட்டது. திருமணம் நின்று போன ஒரு பெண் ஹனிமூனுக்காக எடுத்து வைத்திருந்த டிக்கெட்டில், பிரான்சு தலைநகர் பாரிசுக்கு தனியாக பயணிக்கும் போது அவளுக்குள் ஏற்படும் மாற்றங்கள் குறித்த படம்.
இதில் ஒரு கிராமத்துப் பெண் அனுபவிக்கும் நகர வாழ்வின் சுதந்திரத்தை தனது கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை கங்கணா ரணாவத் வெளிபடுத்தியிருப்பார். இந்தப் படம் சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை உட்பட ஆறு பிரிவுகளில் விருதை தட்டிச் சென்றது. கங்கனா ரணாவத் தமிழில் வெளிவந்த ‘தாம் தூம்’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் குறிப்பிடத்தக்கது.
பிலிம்பேர் விருதுகளின் முழுமையான பட்டியல்:
சிறந்த படம் (விமர்சகர்கள் பிரிவு) - ரஜத் கபூர் (அங்கன் தேகி)
சிறந்த படம் - குயின்
சிறந்த இயக்குனர்- விகாஸ் பால் (குயின்)
சிறந்த நடிகர்- ஷாகித் கபூர் (ஹெய்டர்)
சிறந்த நடிகை - (கங்கணா ரணாவத்)
சிறந்த துணை நடிகர் (பெண்) - தபு (ஹெய்டர்)
சிறந்த துணை நடிகர் (ஆண்) - கை கை மேனன் (ஹெய்டர்)
சிறந்த இசையமைப்பாளர் - ஷங்கர்-இஷான்-லாய் (2 ஸ்டேட்ஸ்)
சிறந்த பாடலாசிரியர் - ராஷ்மி சிங் (சிட்டி லைட்ஸ்)
சிறந்த அறிமுகம் (ஆண்) - ஃபவாத் கான்
சிறந்த அறிமுகம் (பெண்) - க்ரிதி சனோன்
சிறந்த கதை - ரஜத் கபூர்
சிறந்த வசனம் - அபிஜித் ஜோஷி மற்றும் ராஜ்குமார் ஹிரானி (பிகே)
சிறந்த திரைக்கதை - ராஜ்குமார் ஹிரானி மற்றும் அபிஜத் ஜோஷி(பிகே)
சிறந்த பின்னணி பாடகர் - அங்கித் திவாரி, கல்லியான்
சிறந்த பின்னணி பாடகி - கனிகா கபூர், பேபி டால்
வாழ்நாள் சாதனையாளர் விருது - காமினி கௌஷல்
சிறந்த அறிமுக இயக்குனர் - அபிஷேக் வர்மா (2 ஸ்டேட்ஸ்)
சிறந்த நடிகை(விமர்சகர்கள்) - அலியா பட் (ஹைவே)
சிறந்த படத்தொகுப்பு - அபிஜித் கோகதே மற்றும் அனுராக் காஷ்யப் (குயின்)
சிறந்த நடன் இயக்குனர் - அகமத் கான் மற்றும் ஜம்மி கி ராத் (கிக்)
சிறந்த பின்னணி இசை - அமித் திரிவேதி (குயின்)
சிறந்த ஒளிப்பதிவு விருது - பாபி சிங் மற்றும் சித்தார்த்
சிறந்த சண்டை பயிற்சி - ஷாம் கௌஷல்,
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - டாலி அலுவாலியா (ஹெய்டர்)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment