தமிழ் சினிமாவில் நடிகர்கள் என்றால் வெறும் நடிக்க மட்டும் தான், என்ற அதிகாரத்தை உடைத்தவர்களில் சிம்புவும் ஒருவர். சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பிறகு அனைத்து தெரிந்த ஒரே நடிகர் இவர் தான். சினிமா இவரது இரத்ததிலேயே ஊரிய ஒரு விஷயம்.
80களில் மணிரத்னம், பாரதிராஜா, பாலசந்தர் என மிகப்பெரும் ஜாம்பவான்கள் கொடி கட்டி பறந்து கொண்டிருந்த போது, தன் புதிய பாணி கதைகளால் நம்மை கவர்ந்தவர் டி.ஆர். இவர் சினிமாவிற்காகவே இந்த உலகிற்கு உருவாக்கிய குழந்தை தான் இந்த சிம்பு.
தன் மழலை மாறத வயதிலேயே கேமரா முன் வந்து நின்று அட்டகாசம் செய்தார். திரையில் இவர் அழுதால் அனைவரும் அழுதார்கள், சிரித்தார் அனைவரும் சிரித்தார்கள். தன் பிள்ளையை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கினார் டி.ஆர்.
பின் தன் இயக்கதிலேயே காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடிக்க வைத்தார். ஆனால், அதற்கு அடுத்து அவர் நடித்த தம், குத்து, அலை போன்ற படங்கள் அவரது ஓவர் ஆக்டிங்கால் கொஞ்சம் தடுமாறியது. பின் சுதாரித்த சிம்பு மன்மதன் படத்தின் மூலம் தான், யார் என்பதை இந்த திரையுலகிற்கு நிருபித்தார்.
இதை தொடர்ந்து வல்லவன், தொட்டி ஜெயா என வெற்றி படங்களை கொடுக்க மீண்டும் காளை, சிலம்பாட்டம் என சறுக்க மீண்டும் விண்ணை தாண்டி வருவாயா மூலம் விண்ணை தொட்டார். ஒரு நடிகனாக மட்டுமில்லாமல் பாடகராக இவர் பாடிய பாடல்கள் அனைத்து சூப்பர் ஹிட் தான்.
இது மட்டுமில்லாமல் உலகின் நம்பர் 1 ராப் கலைஞன் ஏகான் உடன் இவர் தயாரித்த லவ் ஆந்தம் ஆல்பம் ப்ரோமோவே செம்ம ஹிட் அடித்தது. சிறு வயதிலேயே காதல் தோல்வி, படங்களில் ஹிட், ப்ளாப் என மாறி மாறி பார்த்த சிம்பு, தற்போது மிகவும் பக்குவப்பட்டு விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
அதனால், தான் இவர் படம் வெளிவந்து 2 வருடம் ஆனாலும் இவர் மேல் உள்ள எதிர்ப்பார்ப்பு இன்னும் துளி அளவும் அவரது ரசிகர்களுக்கு குறையவில்லை. இந்த வருடம் இவரின் வாலு, இது நம்ம ஆளு ஆகிய படங்கள் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்று மேலும் மல்டிடேலண்ட் சிம்பு அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
0 comments:
Post a Comment