அணுசக்தி உடன்பாடு விவகாரத்தில் இந்தியா - அமெரிக்கா இடையே குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. |
மோடியின் தேநீர் மந்திரம்
இந்தியா-அமெரிக்கா இடையிலான முழு அளவிலான அணு ஒப்பந்தமானது, அணு உலை செயல்பாடு மற்றும் பராமரிப்பின்போது எதிர்பாராத நிலையில் விபத்து ஏற்பட்டால் அந்த இழப்புக்கு யார் பொறுப்பேற்பது? என்பதில் இரு நாடுகளுக்கும் இடையில் கருத்தொற்றுமை ஏற்படாமல் இடர்பாடு நிலவி வந்தது.இந்நிலையில், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தேனீர் அருந்தியபடி ஒபாமா நடத்திய பேச்சுவார்த்தையில் நீண்ட நாட்களாக நீடித்துவந்த சிக்கல் நீங்கி விட்டதாக தெரிய வந்துள்ளது. இது தவிர இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு, வணிகம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறை தொடர்பான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
புகைப்படத்திற்கு மார்க் போட் லைக்
டெல்லி வந்த ஒபாமாவை பிரதமர் மோடி விமான நிலையத்திற்கே சென்று கட்டிப் பிடித்து வரவேற்றார். இந்தப் புகைப்படம் உலக அளவில் தற்போது பிரபலமாகி விட்டது.அமெரிக்க அதிபர் ஒபாமாவை பிரதமர் நரேந்திர மோடி கட்டிப் பிடித்து வரவேற்கும் புகைப்படத்துக்குத்தான் பேஸ்புக்கின் உரிமையாளர் மார்க் லைக் கொடுத்துள்ளார். |
மோடியின் தேநீர் செய்த மந்திரம்: அணு ஒப்பந்தத்தில் முன்னேற்றம்...லைக் போட்ட மார்க்
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment