இந்த வருடம் வழக்கம் போல் சில படங்களே ஹிட் வரிசையில் இணைந்துள்ளது. நாம் பெரிதும் எதிர்ப்பார்த்த பல படங்கள் ப்ளாப் ஆக, ஏமாற்றமே மிஞ்சியது. அதன் சிறப்பு தொகுப்பு தான் இந்த பகுதி.
அஞ்சான்
இந்த வருடத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும்பாலானோர் எதிர்ப்பார்த்த படம் இது தான். சூர்யா-லிங்குசாமி என பிரம்மாண்ட கூட்டணி இணைந்ததால் படத்திற்கு செம்ம ஹைப் கிடைத்தது. ஆனால், படம் பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.
பண்ணையாரும் பத்மினியும்
விஜய் சேதுபதி சென்ற வருடம் நடித்த அத்தனை படமும் ஹிட் ஆனதால், இந்த படத்திற்கு ஆரம்பத்திலிருந்து எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால், படம் நன்றாக இருந்தாலும் மெதுவான திரைக்கதை படத்தை பதம் பார்த்தது.
ரம்மி
விஜய் சேதிபதியால் தான் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல் அவராலேயே இந்த படம் ஓடாமல் போனது. ஏனெனில் அவர் படத்தில் சில காட்சிகளே வருவது இதன் தோல்விக்கு முக்கிய காரணம்.
யான்
ஜீவா நடிப்பில் இதுவரை வந்த படங்களிலேயே இது தான் ஹைய் பட்ஜெட் படம். இந்தியாவின் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் -ஹாரிஸ் ஜெயராஜ் என பெரிய கூட்டணி இருந்தும் படம் ரசிகர்களை கவராமல் போனது. குறிப்பாக இது ஒரு ஆங்கில படத்தின் அப்பட்டமான காப்பி என்பது அனைவரையும் கோபப்படுத்தியது.
வன்மம்
மீண்டும் விஜய் சேதுபதி, இதே வருடத்தில் யாமிருக்க பயமே வெற்றி படத்தை கொடுத்த கிருஷ்ணாவும் இணைந்து நடித்த படம். வழக்கமான கிராமத்து கதை என்பதால், ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்காமல் போனது.
கோச்சடையான்
சூப்பர் ஸ்டார் முதன் முதலாக மோஷன் கேப்சர் டெக்னாலஜியில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தோன்றுகிறார் என்றவுடன் எல்லோர் மனதிலும் ஒரு வித சந்தோஷத்துடன் தியேட்டருக்கு சென்றனர். ஆனால், ஏதோ பொம்மை படம் பார்ப்பது போல் தான் இருந்தது என ரசிகர்கள் கூறியதாலேயே இப்படத்திற்கு பெரிய அளவில் ரீச் கிடைக்கவில்லை.
நான் சிகப்பு மனிதன்
விஷால் பாண்டிய நாடு படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினியின் டைட்டிலில் நடித்த படம் தான் நான் சிகப்பு மனிதன். இந்த படம் ஹிட் என்று அவர்களே பார்ட்டி வைத்தது தான் கொடுமை, மற்றப்படி எந்த திரையரங்குகளிலும் 10 நாள் தாண்டவில்லை.
இதே போல் என்னமோ ஏதோ, ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி, சைவம், ஒரு ஊர்ல இரண்டு ராஜா, அமரகாவியம், இரும்பு குதிரை, திருமணம் என்னும் நிக்காஹ், வடகறி, பிரம்மன் என பல படங்கள் நம் எதிர்ப்பார்ப்பை வீணடித்த படங்கள்.
0 comments:
Post a Comment