பொதுவாக டோனியை பாராட்டும் இயன் சாப்பல், அவுஸ்திரேலியாவை 216/5 என்ற நிலையிலிருந்து 530 ஓட்டங்கள் எடுக்க விட்டதற்கு காரணம் டோனியே என்று கூறியுள்ளார்.
கடந்த டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஜான்சனுக்கு ஷாட் பிட்ச் பந்துகளை வீசி பல்பு வாங்கிய இந்திய அணி இன்று பிராட் ஹேடின், ரயான் ஹேரிஸ் ஆகியோரிடம் மீண்டும் பல்பு வாங்கியது.
களத்தில் டோனியின் எந்த வித நோக்கமுமற்ற டோனியின் கேப்டன்சியினால் இந்திய அணி காயப்பட்டுள்ளது என்று இயன் சாப்பல் கூறியுள்ளார்.
கங்குலியும் டோனியின் டெஸ்ட் கேப்டன்சி மற்றும் பயிற்சியாளர் டன்கன் பிளெட்சர் மீது தனது விமர்சனங்களைத் தொடுத்தார்.
டோனியின் தலைமை பற்றி அவர் கூறுகையில், இந்த 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமல்ல, தொடர்ந்து சிறிது காலமாக டோனி கேப்டன்சியில் தடுமாறுகிறார். டெஸ்ட் போட்டி மட்டத்தில் அவர் அணியை எந்த ஒரு நம்பிக்கையான நிலைக்கு அழைத்துச் செல்லவில்லை.
ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் சாதனைகள் புரிந்துள்ளார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவரது கேப்டன்சி வீழ்ச்சிகளை சந்தித்து வருகிறது.
இந்திய அணியின் எதிர்காலம் விராட் கோஹ்லி தான் என்று நான் நினைக்கிறேன். இந்திய அணிக்கு தன்னம்பிக்கையும் ஆக்ரோஷமும் தேவை, கோஹ்லி ஒரு தன்னம்பிக்கை மிக்க அணித்தலைவர், ஆக்ரோஷமான அணித்தலைவர் நமது அணிக்கு இப்போது தேவை.
சச்சின் கேப்டன்சிக்கு பிறகு என் தலைமையின் கீழ் விளையாடினார். நான் டிராவிடின் தலைமையின் கீழ் ஆடினேன்.
டிராவிட் டோனியின் தலைமையின் கீழ் ஆடியுள்ளார். மைக்கேல் கிளார்க்கின் தலைமையில் பொண்டிங் விளையாடினார். எனவே ஒரு வீரராக டோனி தொடரலாம் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment