ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்துள்ள தன் மகள் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக அவரது தாய் தெரிவித்துள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது.
இந்நிலையில் நெதர்லாந்தைச் சேர்ந்த மேரி என்ற பெண், தன் மகள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இருப்பது குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து இவர் கூறியதாவது, தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ள என் மகள் வெனிஸ்ஸாவிடம்(Vaneesa- Age19)பேசிய போது அவள் தனது கணவர் மற்றும் நண்பர்களுக்காக சமையல் செய்வதாக கூறினாள்.
நண்பர்கள் என்று அவள் கூறியது அமைப்பில் இடம்பெற்றுள்ள தீவிரவாதிகளை தான். அந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த மற்ற பெண்களுடன் அவள் அடிக்கடி பேசுவாள்.
ஆனால் அவள் திரும்பி வருவதாக தெரியவில்லை. இது கொஞ்சம் வருதத்தை தருகிறது என கூறியுள்ளார்.
மேரியின் மகள் வெனிஸ்ஸா, நெதர்லாந்து, பெல்ஜியம், ஜேர்மனி, ஸ்வீடன் நாடுகளைச் சேர்ந்த பெண்கள் தங்கியிருக்கும் குடியிருப்பில்தான் வசித்து வருகிறார்.
சிரியாவுக்கு அவர் வந்து சேர்ந்ததும், தீவிரவாதி ஒருவரை அவருக்கு கல்யாணம் செய்து வைத்துள்ளனர். இதன்பின் அவர் துருக்கி எல்லைப் பகுதி அருகே உள்ள நகருக்கு இடம் பெயர்ந்துள்ளார்.
இதற்கிடையே ஐஎஸ் அமைப்பின் மீது ஈர்க்கப்படும் பல இளம் பெண்கள் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் பிற சமூக வலைதளங்களின் மூலம் ஐ.எஸ் இயக்கத்தை பிரபலப்படுத்துவது மட்டுமல்லாமல் ஆள் சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 comments:
Post a Comment