மாயமான இந்தோனேஷிய விமானத்தின் உதிரி பாகங்களை கண்டுபிடித்துள்ளதாக இந்தோனேஷிய விமானப்படை அறிவித்துள்ளது. இதன்மூலம் விமானம் கடலில் விழுது நொறுங்கிவிட்டது என்பது உறுதியாகின்றது.
கடந்த ஞாயிறு அன்று இந்தோனேஷியாவின் சுரபவா நகரில் இருந்து சிங்கப்பூருக்கு கிளம்பி சென்ற விமானம், சில நிமிடங்களில் திடீரென மாயமானது.
இந்த விமானம் கடலில் விழுந்துவிட்டதாக இந்தோனேஷிய அரசும் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது.
இந்நிலையில் காணாமல் போன விமானம் ஜாவா கடல் பகுதியில் 32,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது அடர்த்தியான மேகங்கள் இருப்பதால் விமானத்தை 38000 அடி உயரத்தில் பறக்க விமான பைலட் கட்டுப்பாட்டு அரை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளார்.
ஆனால் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இது நடந்த சில நிமிடங்களில் விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. விமானம் சென்ற பகுதியில் அடிக்கடி இடி, மின்னல் தாக்கும் பகுதி என்பதால் விமானத்தை இடி தாக்கி இருக்கலாம் என்றும் இதனால் அது நொறுங்கி கடலில் விழுந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
எனவே, நொறுங்கி விழுந்த விமானத்தின் உதிரி பாகங்கள் ஆழ்கடலுக்கு உள்ளாக சென்று இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இதுகுறித்து இந்தோனேஷிய விமானப்படை செய்தி தொடர்பாளர் தஹ்னான்டோ கூறியதாவது :-
"விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தோனேஷிய ஹெலிகாப்டர் ஒன்று விமானத்தின் சிதறிய உதிரி பாகங்களையும், 2 இடங்களில் விமானத்தின் எண்ணை படலங்கள் மிதப்பதையும் ஜாவா தென் கிழக்கு கடலில் உள்ள பெலிதுங் தீவு பகுதியில் கண்டுபிடித்து இருக்கிறது.
இது விமானம் கடைசியாக தொடர்பு துண்டிக்கப்பட்ட இடத்தில் இருந்து வெகு தொலைவில் இல்லை.
அந்த பகுதியில் காணப்படும் எண்ணை படலங்கள் சேகரிக்கப்பட்டு அது மாயமான விமானத்தில் இருந்த பெட்ரோல்தானா? என்பது ஆய்வு செய்யப்படும்." என தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment