பிஜேபி ஆட்சிக்கு வந்தால் என்னென்ன அனர்த்தங்கள் ஏற்படும் என நடுநிலையாளர்கள் பயந்தார்களோ அவை நடக்க ஆரம்பித்துவிட்டன. எழுத்தாளர் பெருமாள் முருகன் நான்கு வருடங்களுக்கு முன்பு எழுதிய நாவல் பெண்களை இழிவுப்படுத்துகிறது என்றுகூறி, இந்துத்துவா வெறியர்கள் சிலர் அந்நாவலை தீயிட்டு கொளுத்தியதோடு நாவலை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
பிகே படத்துக்கு எதிராகவும் இந்துத்துவா சக்திகள் வெறியாட்டம் போட ஆரம்பித்துள்ளன. பிகே டிசம்பர் 19 -ஆம் தேதி வெளியானது. குடும்பம் குடும்பமாக படத்தை ரசித்து வருகின்றனர். இதன் காரணமாக குறைந்த தினங்களிலேயே படம் 200 கோடியை இந்தியாவில் தாண்டியது. 300 கோடியை படம் வசூலிக்கும் என்ற நிலையில் இந்துத்துவா அமைப்புகள் கலவரத்தில் இறங்கின.
குஜராத்தில் பிகே ஓடும் இரு திரையரங்குகளை 20 பேர் கொண்ட இந்துத்துவா கும்பல் தாக்கியது. அதேபோல் ஆக்ரா, போபால் போன்ற நகரங்களிலும் இவர்களின் வெறியாட்டம் காரணமாக பிகே காட்சிகள் நிறுத்தப்பட்டன.
கருத்து சுதந்திரத்தை நசுக்கும் இந்த ரவுடி கும்பலின் செயலை அரசோ, போலீஸேn கண்டு கொண்டதாக தெரியவில்லை. நாட்டில் மத தீவிரவாதத்தை தூண்டும் வேலையை இந்த கும்பல்கள் திட்டமிட்டு தொடங்கி வைத்துள்ளன.
0 comments:
Post a Comment