பத்து ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள், புகழ், சர்ச்சைகள் என எல்லாவற்றையும் சந்தித்து விட்டேன்’ என அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.
அதிக சிக்சர் விளாசிய மெக்கல்லம்
ஒரே ஆண்டில், டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் பட்டியலில் மெக்கல்லம் முதலிடம் பிடித்துள்ளார்.
2014ல், 9 போட்டியில் அவர் இதுவரை 33 சிக்சர் அடித்து அசத்தியுள்ளார். அவுஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் (2005, 15 போட்டி), இந்தியாவின் ஷேவாக் (2008, 14 போட்டி) தலா 22 சிக்சர் அடித்துள்ளனர்.
எவரெஸ்ட் சிகரத்திற்கு எடுத்து செல்லப்படும் ஹியூக்ஸின் துடுப்பாட்ட மட்டை
பவுன்சரில் உயிரிழந்த பிலிப் யூக்சுக்கு வித்தியாசமான முறையில் மரியாதை செலுத்தும் விதமாக அவர் பயன்படுத்திய துடுப்பாட்ட மட்டையை உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்டில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பேட்மிண்டன் வீரர் கே.ஸ்ரீகாந்த் முன்னேற்றம்
இந்திய இளம் பேட்மிண்டன் வீரர் கே.ஸ்ரீகாந்த், உலக பேட்மிண்டன் ஒற்றையர் தரவரிசையில் இரண்டு இடங்கள் உயர்ந்து 4வது இடத்தை பிடித்துள்ளார்.
சாய்னா நேஹ்வாலின் விருப்பம்
இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேஹ்வால் கூறுகையில், புதிய ஆண்டில் நிறைய பட்டங்களை வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். எனது இன்னொரு பிரதான இலக்கு 2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி. அந்த ஆண்டில் உடல்தகுதி விஷயத்தில் ரொம்ப கவனமாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.
இந்திய அணி வீரர்கள் தங்களுக்குள்ளே மோதிக் கொள்வார்கள்
இந்திய அணி வீரர்களை அவுஸ்திரேலிய வீரர்கள் வார்த்தையால் சீண்டிக் (ஸ்லெட்ஜிங்) கொள்ள தேவை இல்லை. அவர்கள் பற்றி அதிகம் பேச வேண்டியது கூட இல்லை. தற்போது இந்திய வீரர்கள் தங்களுக்குள்ளே மோதிக் கொள்கிறார்கள் என்று அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் சுமித் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment