↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
களவாணி படம்தான் விமலுக்கு கமர்சியல் அங்கீகாரத்தை கொடுத்தது. பின்னர் வாகை சூடவா அவரை ஒரு நல்லதொரு பர்பாமென்ஸ் நடிகராக அடையாளம் காட்டியது. அதையடுத்து அவர் நடிப்பில் வெளியான கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை போன்ற படங்கள் ஓரளவு வசூலித்தன. விமலை ஒரு நல்ல நடிகராகவும் நிறுத்தின.
இருப்பினும், நேற்று இன்று, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா என அவர் நடிப்பில் வெளியான படங்கள் தயாரிப்பாளர்களின் கையை பலமாக பதம் பார்த்து விட்டன. அதனால் மினிமம் கியாரண்டி ஹீரோவாக இருந்த விமலை நம்பி கோடிகளை கொட்டி படமெடுக்க படஅதிபர்களுக்கு தைரியம் போய் விட்டது. அதனால் அவரை புக் பண்ண நினைப்பவர்கள்கூட பட்ஜெட்டை குறைத்து, அவரது சம்பளத்தையும் குறைத்து பேசி வருகின்றனர்.
ஆனால், விமலிடம் கால்சீட் கேட்க செல்லும்போது, அவர்தரப்பில் இருந்து ஒன்றரை கோடி கொடுத்தால் மட்டுமே கால்சீட் என்று எகிறிப் பேசுகிறார்களாம். ஒரு காலத்தில் தயாரிப்பாளர்களின் நிலை மோசமாக இருந்தால் தனது சம்பளத்தைகூட விட்டுக்கொடுத்து நடித்த விமல், இப்போது இப்படி அதிரடியாக பேசுவதால், அவரை நம்பி சென்ற தயாரிப்பாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.
முக்கியமாக, அவரது சம்பளமே ஒன்றரை கோடி என்றால் படத்தை முடிக்க எப்படியும் ஒரு 4 கோடியாவது ஆகிவிடும். ஆனால் இப்போது விமல் படங்கள் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகும் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. ஒரு நிரந்தரமான வியாபார வட்டம் இல்லாத ஹீரோவை நம்பி எப்படி பெருசாக கால் வைக்க முடியும் என்றும் தங்கள்தரப்பு நிலையை சொல்லி புலம்புகிறார்கள் பட அதிபர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment