நைஜீரியாவில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சரிசமமாக உள்ளனர். அங்கு இஸ்லாமிய ஷரியத் ஆட்சியை அமல்படுத்தக் கோரி போகோஹாரம் தீவிரவாதி கள் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் முஸ்லிம்கள் பெரும் பான்மையாக வசிக்கின்றனர்.
இந்தப் பிராந்தியத்தின் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த இரண்டாம் முகமது சன்யூசி, போகோஹாரம் தீவிரவாதிகளை தீவிரமாக எதிர்த்து வருகிறார்.
இந்நிலையில் கனோ நகரில் உள்ள மசூதியில் நேற்று தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த போது இரண்டு தற்கொலைப் படை தீவிரவாதிகள் வெடித்துச் சிதறினர்.
அதேநேரம் மசூதிக்கு வெளியே சில தீவிரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 120 பேர் உயிரிழந் தனர். 270 பேர் காயமடைந்தனர்.
முதல்கட்ட விசாரணையில் போகோஹாரம் தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment