திருட்டு வி.சி.டி.யினால் திரையுலகமே நிர்கதியாகிவிட்டது. அதை ஒழிக்கவும், மக்களுக்கு திருட்டு வி.சி.டி.யில் படம் பார்ப்பது தவறு என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும் டிசம்பர் 2 ஆம் தேதியான இன்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தயிருப்பதாக திரையுலகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த பேரணிக்கும், ஆர்ப்பாட்டத்துக்கும் அரசு அனுமதி மறுத்துள்ளது.
பேரணிக்கு அனுமதி கேட்டு திரையுலகம் சார்பில் முறைப்படி விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முறையான பதில் திரையுலகினருக்கு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், இப்போதைக்கு பேரணி எல்லாம் வேண்டாம் என்று மேலிடத்திலிருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அப்புறம் என்ன. பேரணி, ஆர்ப்பாட்டத்தையெல்லாம் தூக்கி பரணில் போட்டு ஆளாளுக்கு தங்கள் வேலையை பார்க்க போய்விட்டார்கள். அதிகார மையம் கண்ணசைக்கும்வரை இனி கப்சிப்தான்.
0 comments:
Post a Comment