'எனது நாட்கள் எண்ணப்படுகின்றன. நான் எமனுடன் பேராடியபடி உள்ளேன்' என்று சென்னையை கலக்கிய தாதா கவுஸ் பாஷா கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.
ஒரு காலத்தில் சென்னையை கலக்கியக் கொள்ளை மன்னன் கவுஸ் பாஷா, நேற்றுப் பகலில் திடீரென்று சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார். நடக்க முடியாமல் காரிலிருந்து இறங்கி வந்த அவருடன், மனைவி கீதா, மகள் பாத்திமா மற்றும் வக்கீல் ஆகியோர் வந்திருந்தார்கள்.
அப்போது அவர் கையெழுத்துப் போட்ட மனு ஒன்று ஆணையர் அலுவலகத்தில் கொடுத்தார். அந்த மனுவில், ”நான் சிறு, சிறு குற்றங்கள் செய்து சில வழக்குகளில் தண்டனையும், சில வழக்குகளில் விடுதலையும் பெற்றுள்ளேன்.
ஆனால் கடந்த 5 வருடங்களாக எந்தக் குற்றங்களிலும் ஈடுபடாமல், திருந்தி வாழ்கிறேன். என்னை காவல் துறையினர் விசாரணை என்ற பெயரில் தொல்லை கொடுக்கிறார்கள். அது தடுக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கவுஸ் பாஷா, “நான் இளம் வயதில் நான் ஆடாத ஆட்டம் இல்லை. என் மீது போடாத வழக்கு இல்லை. 200 வழக்குகளுக்கு மேல் நான் சந்தித்துள்ளேன். ஆனால் அத்தனையும் திருட்டு வழக்குகள் தான். கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற கொடுமையான குற்றங்கள் எதிலும் நான் ஈடுபடவில்லை. மக்களை துன்புறுத்தாமல்தான், எனது குற்ற நடவடிக்கைகள் இருக்கும்.
0 comments:
Post a Comment