இலட்ச்சகனக்கான ஈழ தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு துணை போன காங்கிரஸ் கட்சியுடன் தன்னை இணைத்துக்கொண்ட நடிகை குஷ்பு பத்திரிகையாளர் சந்திப்பில் ஈழதமிழர்களுக்காக இறுதி மூச்சு வரை கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்த ஒரு விடுதலை அமைப்பை எந்தவித சலனமும் இன்றி “தீவிரவாத இயக்கம்” என்று கூரிய பேச்சு உலகம் முழுவதும் உள்ள அனைத்து தமிழர்களையும் மிகவும் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக அனைத்து மட்டங்களிலும் நடிகை குஷ்புவிற்கு எதிர்ப்புகளும் கண்டனங்களும் குவியும் இவ்வேளையில் உலகம் முழுதும் பரவியுள்ள தமிழர் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் புலம்பெயர்ந்த (Diaspora) உலக தமிழ் வளர்ச்சி மகாநாடு நியூயோர்க்கில் வரும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் 23 நாடுகளை சேர்ந்த 84 பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
மாநாட்டில் இளையோர் பிரிவில் (Tamil Youth) கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தில் குஷ்புவிற்கு எதிரான நடவடிகையும் உள்ளதாக அறியப்படுகிறது.
இதன்படி, குஷ்பு நடிக்கும், தயாரிக்கும் படங்கள், மற்றும் இவரது நிறுவனத்துக்கு நடிக்கும், உதவும் நடிக நடிகர்களின் படங்களுக்கு ஆதரவு அளிபதில்லை எனவும், இவர்களின் தயாரிப்புகளை புலம்பெயர்ந்த நாடுகளில் திரையிடவோ, வாங்கவோ கூடாதெனவும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அது நடைமுறைப்படுத்தபடும் எனவும் அறியப்படுகிறது.
தீர்மானத்தின் இறுதி வரைபு ஞாயிறு மாலை (New York Time) உலகம் முழுவதும் உள்ள ஊடகங்களுக்கும், அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று அமைப்பில் குரல் தரவல்ல அமைப்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
குஷ்புவுக்கு எதிரான இந்த தீர்மானத்தால் அதிகம் பாதிக்கப்படுபவர் சுந்தர். சி யும் அவர் படங்களில் நடிக்கும் நடிகர்களுமே என நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையிலேயே அதன் தாக்கத்தை குறைப்பதற்காக சுந்தர்.சி குஷ்புவை பிரிய போகிறார் என்கிற புதுப் புரளியை சுந்தர்.சி யே கிழப்பிவிட்டுள்ளார் என்று திரையுலகில் பரவலாக பேசப்பட்டு அது செய்தியாகவும் வந்துள்ளது.
0 comments:
Post a Comment