இந்தோனோசியாவை சேர்ந்த 36 வயதாகும் கிறிஸ்டியானாவதி, அவரது அம்மா, அவரது தம்பியின் கும்பத்தினர் என அனைவரும் புத்தாண்டைக் கொண்டாட சிங்கப்பூருக்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்தனர்.
அதன்படி, குடும்பத்திலுள்ள நான்கு குழந்தைகள் உட்பட பத்து பேருக்கும், 7.30 மணிக்கு சிங்கப்பூர் செல்லும் ஏர் ஏசியா விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர்.
ஆனால் ஏர் ஏசியா நிறுவனம் இரண்டு மணி நேரத்திற்கு முன் கிளம்பும். QZ5801 என்ற விமானத்திற்கு அவர்களின் அனுமதியின்றி பயணத்தை மாற்றியதால் குழப்பம் ஏற்பட்டது.
அவர்களின் பயண மாற்றம் குறித்த தகவலைத் தெரிவிக்க டிசம்பர் 15 மற்றும் 16 திகதிகளில் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசியில் அழைத்தனர். நல்ல வேளையாக அந்த அழைப்பை கிறிஸ்டினா எடுக்கவில்லை.
ஒரு வேளை அந்த அழைப்பை எடுத்திருந்தால் நேற்று காலை காணாமல் போன விமானத்தில் அவரது குடும்பமும் தொலைந்து போயிருக்கும்.
அழைப்பை எடுக்காத கிறிஸ்டியானா, நேற்று காலை 7.30 மணிக்குக் கிளம்பும் விமானத்தைப் பிடிக்க விமானநிலையத்திற்கு தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.
ஆனால் ஏர் ஏசியா நிறுவனமோ, நீங்கள் தாமதமாக வந்து விட்டீர்கள், உங்கள் விமானம் போய்விட்டது என்று கூறியுள்ளனர். இந்த திடீர் குழப்பத்தால் கிறிஸ்டியானா கடும் கோபமடைந்தார்.
7:30 மணிக்குச் செல்லும் விமானத்திற்காக புதிய டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டிருந்த போதுதான், இதற்கு முன் சென்ற QZ5801 விமானம் காணாமல் போனது கிறிஸ்டியானா குடும்பத்திற்குத் தெரிய வந்தது. உடனடியாக அந்த டிக்கெட்டையும் ரத்து செய்து விட்டனர்.
இதுகுறித்துப் பேசிய கிறிஸ்டியானா, விமானம் விபத்துக்குள்ளான செய்தியைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்து அழுதேன். அந்த விமானத்தில் நாங்கள் இல்லாதது கடவுளின் கருணை. விமானத்தில் பயணித்த அனைவரும் உயிருடன் திரும்புவார்கள் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
வருடத்திற்கு இருமுறை சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்டியானா குடும்பம், இப்போது ஏர் ஏசியா மீதான நம்பிக்கை போய்விட்டதாக தெரிவித்துள்ளார்கள்.
0 comments:
Post a Comment