↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஏர் ஏசியா விமானத்தில் பயணித்தோரின் சடலங்கள் ஜாவா கடற்பகுதியில் மிதப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்தோனேஷாவிலிருந்து 162 பயணிகளுடன் நேற்று முன்தினம் சென்ற ஏர் ஏசியா QZ8501 விமானம் ஜாவா பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதை இந்தோனேஷிய அரசு உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் இந்தோனேஷியாவின் களிமன்தன் தீவுக்கு அருகே விமானத்தின் சிதறிய பாகங்கள் மிதப்பதாக அந்நாட்டு விமான போக்குவரத்துத் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது அங்கு ஏராளமான சடலங்களும் மிதப்பதாக கூறப்படுகிறது. இத்தகவலைக் கேள்விப்பட்டு விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் கண்ணீரில் ஆழ்ந்துள்ளனர்.

ஆறு சடலங்கள் கண்டுபிடிப்பு
காணாமற்போன எயர் ஏசியா விமானத்தை தேடும் பணிகள் தொடரும் நிலையில் இந்தோனேஷியாவின் ஜாவா கடலில் மிதந்ததாகக் கூறப்படும் ஆறு சடலங்களை மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

கடலில் மிதக்கும் தடயப் பொருள்கள் காணாமற்போன விமானத்தினுடையதாக இருப்பதற்கான 95 வீத வாய்ப்புக்கள் இருக்கின்றன எனவும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மூன்றாம் நாள் தேடுதலின் போது இன்று இந்த சடலங்களும் தடயப் பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான காட்சிகள் இந்தோனேஷிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுள்ளன. தேடுதலும் மீட்புப் பணிகளும் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 40 சடலங்கள் கண்டுபிடிப்பு
காணாமல் போன ஏர் ஏசியா விமானம் புறப்பட்ட இடத்தில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் ஜாவா கடலில் விழுந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் விமானத்தில் பயணித்த 40 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சோகத்தை சொல்லிக்கொள்ள வார்த்தைகள் ஏதுமில்லை என ஏர் ஏசியா தலைமை அதிகாரி தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஏர் ஏசியா கடலில் தான் விழுந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலில் மிதக்கும் உடல்கள் தொடர்பான காட்சிகள் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது வரை 40 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்தோனேஷியா கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சுர்பையா விமான நிலையத்தில், பலியான பயணிகளின் உறவினர்கள் குவிந்துள்ளனர். பயணிகள் இறந்துவிட்டனர் என்ற செய்தியை கேட்டதும், கூடியிருந்த பலர் தலையில் அடித்து கொண்டு அழுது கதறும் காட்சி அனைவரையும் நெஞ்சுருக செய்துள்ளது.
பலர் சோகம் தாங்க முடியாமல் மயங்கி விழுவதையும் காண முடிகிறது

9 மாதங்களில் 3 விமானங்களை இழந்த மலேசியா! 699 பேர் பலி!- நிஜத்தின் தேடல்

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top