↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாத திமுக எம்.பி. கனிமொழிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை சிறப்பு நீதிமன்றம் பிறப்பிக்க இருப்பதாக எச்சரிக்கப்பட்டதால் திடீர் பரரப்பு ஏற்பட்டது. பின்னர் கனிமொழியின் வழக்கறிஞர் ஆஜராகி மன்னிப்பு கோரியதால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படவில்லை. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கின் இறுதிவாதம் இன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இன்றைய விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆ.ராசா உள்ளிட்டோர் ஆஜராகி இருந்தனர். பின்னர் வழக்கின் இறுதி வாதம் டிசம்பர் 19-ந் தேதி நடைபெறும் என்று ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் இன்றைய விசாரணையின் போது திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட சிலர் நேரில் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து கனிமொழி உட்பட நேரில் ஆஜாராகத அனைவருக்கும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை பிறக்க இருப்பதாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி சைனி தெரிவித்தார் இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கனிமொழி சார்பில் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரினார். இதனை ஏற்று கனிமொழிக்கு எதிராக பிறப்பிக்கப்பட இருந்த பிடிவாரண்ட் ரத்து செய்யப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.
Home
»
kanimoli
»
news
»
news.india
» 2ஜி: கைது அபாயத்தில் சிக்கி தப்பிய கனிமொழி- வக்கீல் மன்னிப்பு கேட்டதால் தப்பினார்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment