↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
மதுரைக்கு கொண்டு வரப்பட்ட 20 வெடிகுண்டுகளில் 11 குண்டுகள் குப்பைத் தொட்டியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மீதமுள்ள 9 குண்டுகள் எங்கு இருக்கக்கூடும் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை அண்ணா நகரில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமாக சிவப்பு நிற பை ஒன்று கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றி பரிசோதித்தபோது தான் அதில் 11 வெடிகுண்டுகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வெடிகுண்டுகளை வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் செயலிழக்கச் செய்தனர். விசாரணையில் மதுரை முனிச்சாலையைச் சேர்ந்த ரவுடி கீரிமணி தான் இந்த குண்டுகளை குப்பைத் தொட்டியில் போட்டிருக்கக்கூடும் என்று கூறப்பட்டது.
பிரபல ரவுடி அப்பள ராஜாவின் நெருங்கிய கூட்டாளி தான் இந்த கீரிமணி. அப்பள ராஜாவின் மற்றொரு கூட்டாளியான பிரவீன் உள்பட 4 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயுதங்கள், வெடிகுண்டுகளுடன் சென்னையில் போலீசில் சிக்கினர். போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வரிச்சியூர் செல்வம் 20 வெடிகுண்டுகள் கேட்டதாகவும், அதை கீரிமணி மூலம் அவருக்கு அனுப்பி வைத்ததாககவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் கீரிமணியை கண்காணித்து வந்த நிலையில் தன் குப்பைத் தொட்டியில் 11 வெடிகுண்டுகள் சிக்கின. அதனால் இந்த குண்டுகளை கீரிமணி தான் குப்பையில் போட்டிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள். ஆனால் மதுரைக்கு கொண்டு வரப்பட்ட 20 குண்டுகளில் 11 தான் குப்பையில் கிடந்தன. மீதமுள்ள 9 குண்டுகள் எங்கே என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் வரிச்சியூர் செல்வம் மதுரை நீதிமன்றத்திலும், கீரிமணி விழுப்புரம் நீதிமன்றத்திலும் இன்று சரண் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment