↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
நேரு பிறந்த நாள் மாநாட்டில் பங்கேற்று காங்., துணை தலைவர் ராகுல் பேசுகையில், நாட்டில் அனைவரும் தெருவை சுத்தம் செய்து கொண்டிருக்கின்றனர். இது போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் வேலையாக த்தான் உள்ளது என்றார். காங்கிரஸ் சில தவறுகள் செய்திருக்கலாம். ஆனால் அது எங்களின் கொள்கையில் ஏற்பட்ட குறைபாடு அல்ல. கொள்கை பிடிப்பில் எவ்வித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து பாடுபடுவோம் என்றார்.
நேரு 125 வது பிறந்த நாள் மாநாடு டில்லி டல்கோத்ரா அரங்கில் இன்று முதல் துவங்கியது. மாநாட்டில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்., தலைவர் சோனியா, காங்., துணை தலைவர் ராகுல், டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் மற்றும் காங்., நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ராகுல் பேசுகையில். காங்கிரஸ் மற்றும் நேரு அன்பை போற்றி வளர்த்தது. மனித நேயத்திலும் , அன்பிலும் தான் காங்கிரசுக்கு நம்பிக்கை. தற்போது அரசியலில் பழிதீர்க்கும் படலம் தான் நடக்கிறது. இதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. காங்கிரஸ் எந்தவொரு தவறும் செய்ய விரும்பவில்லை. ஆனால் நாங்கள் தவறு செய்திருக்கலாம், ஆனால் எங்கள் கொள்கையில் ஏற்பட்ட குறைபாடுகளால் அல்ல. கிளீன் இந்தியா திட்டம் என்பது மூலம் மக்கள் தெருக்களை சுத்தம் செய்து கொண்டிருக்கின்றனர். இது போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் வேலையாக த்தான் உள்ளது . பணிகள் எதுவும் நடக்கவில்லை. போட்டோ போஸ் ( லெஸ் வொர்க், மோர் போட்டோ ) கொடுப்பதுதான் முக்கிய வேலையாக உள்ளது. தற்போது உள்ள கட்சியினர் மக்களை பிளவு படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் விஷக்கருத்துக்களை பரப்பி வருகின்றனர். இவ்வாறு ராகுல் பேசினார்.
நேருஜியின் கனவுகளே பிரதிபலிக்கும் : சோனியா பேசியதாவது: நேருவின் கொள்கைகள் அனைவருக்கும் சொந்தமானவை. நேரு இல்லாமல் செவ்வாய்கிரக பயணம், மங்களயான் , சந்திரயான் சாத்தியமாகி இருக்க முடியாது. நேருவின் கொள்கைகள் பரப்புவதே அவருக்கு நாம் செய்யும் அர்ப்பணிப்பு ஆகும். சிலர் நேருவின் கொள்கைகளை அழிக்க முயல்கின்றனர். இது முடியாதது. இந்த முயற்சிக்கு எதிராக கடுமையாக குரல் கொடுப்போம். நேருஜியின் கனவுகளே தற்போது பிரதிபலித்து கொண்டிருக்கின்றன. எதிர்காலத்திலும் இன்னும் பிரதிபலிக்கும். நாம் கட்சியை பலப்படுத்த வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். மதச்சார்பற்றவரே இந்தியாவை காத்திட முடியும் என நேரு கூறியுள்ளதை நினைவு கூர்கிறேன். இவ்வாறு சோனியா பேசினார்.
பா.ஜ., பதிலடி : பா.ஜ.,வின் செய்தி தொடர்பாளர் நளின்கோலி கூறுகையில், ராகுலின் அரசியல் வாழ்க்கையே போட்டோவிற்கு போஸ் கொடுப்பதை வைத்து தான் இருக்கிறது. உள்ளூர் ரயில்களில் பயணம் செய்வது, தலித் வீடுகளுக்கு சென்று குசலம் விசாரிப்பது என அனைத்தையும் போட்டோ எடுத்து பிரசுரித்து தான் அவர் அரசியல் செய்கிறார்,' என்று கூறி உள்ளார்.
Home
»
news
»
news.india
»
rahul
»
sonia
» 'தவறுகள் செய்து விட்டோம் '- ராகுல் ; நேரு கொள்கை அழிக்க முயற்சி; சோனியா
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.