ஜேர்மனியில் செக்ஸ் கடையை அடித்து நொறுக்கிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜேர்மனியின் Hagen நகரத்தில் உள்ள செக்ஸ் கடைக்கு நேற்று வாலிபர்கள் இருவர் வந்துள்ளனர்.
ஆபாச படங்களை வாங்க வந்த நபர்களை, கேபினில் சிறிது நேரம் காத்திருக்குமாறு கடையின் உரிமையாளர் கூறியுள்ளார்.
ஆனால் பொறுமையிழந்த அந்த வாலிபர்கள், தங்களது பணத்தை திருப்பி தருமாறு கடையின் உரிமையாளரிடம் சண்டை போட்டுள்ளனர்.
ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இந்த விடயம் தெரியவரவே விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது தாங்கள் இதை செய்யவில்லை என அவர்கள் மறுத்து வந்த போதிலும், கடையில் பதிவான வீடியோ இவர்களை காட்டிக் கொடுத்து விட்டது.
0 comments:
Post a Comment