உலகக்கிண்ணத் தொடரில் தென் ஆப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் இன்று பலப்பரிட்சை நடத்தின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா சிறப்பாக விளையாடி சதம் விளாசினார்.
இது ஆம்லாவின் 20வது சதம் ஆகும். ஆம்லா தனது 20வது சதத்தை 108வது இன்னிங்சில் பூர்த்தி செய்துள்ளார். இதனால் ஒருநாள் போட்டிகளில் குறைந்த போட்டிகளில் 20வது சதம் விளாசிய வீரர் என்ற பெருமை ஆம்லாவுக்கு கிடைத்துள்ளது.
முன்னதாக இந்திய அதிரடி வீரர் விராட் கோஹ்லி 133 இன்னிங்சுகளில் 20வது சதத்தை பூர்த்தி செய்ததுதான் இதற்கு முன்பு சாதனையாக இருந்து வந்தது. தற்போது அந்த சாதனையை ஆம்லா முந்தியுள்ளார்.
0 comments:
Post a Comment