புலிக்கு எலி தயவு தேவையில்லை. எலிக்கோ புலி தயவு தேவைப்படுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பல படங்களாக பிரிந்தேயிருக்கும் எலியையும் புலியையும் இணைத்துவிட வேண்டும் என்று குரூப் முயல்கிறதாம். எலித் தேவை இல்லாமலே நம்ம படம் நல்லாதான போயிட்டு இருக்கு. அது எதுக்கு இப்போ? என்கிறாராம் புலி. ஏற்கனவே நம்ம மேல மேலிடத்துக்கு ஒரு கோபம் இருக்கு. இந்த நேரத்துல எலியை கூட்டு சேர்த்தா அது இன்னும் தலைவலி என்பதுதான் புலியின் மனசுக்குள் ஓடும் சப் டைட்டில்!
இருந்தாலும் டைரக்டர் விரும்புவதால் எந்த நேரத்திலும் இந்த இணைப்பு நடக்கலாம் என்கிறார்கள். ஆனால் அதற்கான முதல் சந்திப்பை இருவரும் விரும்பி ஏற்க வேண்டுமல்லவா? அந்த விஷயத்தில் ‘நான்தான் பெரிசு’ என்கிற மனப்போக்கில் நடந்து கொள்கிறார்களாம் இருவரும். சந்திப்பு நடக்காமல் இந்த ‘ஒட்டுவேலை’ சாத்தியம் இல்லை என்று நம்புகிறது இயக்குனர் தரப்பு. இந்த நிமிடம் வரை அந்த இணைப்புக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லையாம்.
‘அட… இதென்னய்யா எலி, புலின்னுட்டு?’ வேறொன்றுமில்லை. ‘எலி’ என்ற படத்தில் வடிவேலு ஹீரோவாகவும், ‘புலி’ என்ற படத்தில் விஜய் ஹீரோவாகவும் நடிக்கிறார்கள்.
0 comments:
Post a Comment