↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கிருஷ்ணகிரியில் மாமனாரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மருமகள் உள்பட மூவர் போலீசாரால் கைது செய்யப்படனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகிலுள்ள சூளகிரி வட்டம் அட்ரகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசப்பா. இவருக்கு, ஜெகதீஸ்வரி என்ற மனைவியும், சதீஸ், ஸ்ரீதர் என்ற இரு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். வெங்கடேசப்பா அன்றாடம் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டின் முன்பாக உள்ள வராண்டாவில் படுத்து உறங்குவார். வழக்கம் போல் வெள்ளிக்கிழமை இரவு வீட்டு வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், நள்ளிரவு 12.30 மணியளவில் வெங்கடேசப்பா வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் இருவர் வீட்டின் கேட்டிற்கு வெளியில் நின்று கொண்டு வெங்கடேசப்பா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். வெங்கடேசப்பா அலறல் சத்தம் கேட்டு, அவரது குடும்பத்தினர் வெளியில் ஓடி வருவதற்குள், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். உடலில் கடுமையான தீ காயம் அடைந்த வெங்கடேசப்பாவை மீட்ட அவரது குடும்பத்தினர், 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே வெங்கடேசப்பா பரிதாபமாக உயிரிழந்தார்.

மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் வெங்டேசப்பா வீட்டு நாய்க்கும் காயம் ஏற்பட்டது. மேலும், வீட்டுக்கு முன்பாக நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது. இது குறித்து, சூளகிரி இன்ஸ்பெக்டர் சுபாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். முதற்கட்ட விசாரணையில் வெங்கடேஷப்பா கொலைக்கு அவரது மகனான ஸ்ரீதரின் மனைவி சரஸ்வதி என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.


அவரிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் ஓசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ள மருதாண்டப்பள்ளியை சேர்ந்த யுவராஜ் என்பவருக்கும், சரஸ்வதிக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. இதனை வெங்கடேசப்பா பலமுறை கண்டித்ததால் அவரை கொலை செய்ய சரஸ்வதி திட்டம் தீட்டியுள்ளார்.

தன்னுடைய கள்ளக்காதலன் யுவராஜூம், அவரது நண்பரான, மருதாண்டப்பள்ளியை சேர்ந்த சந்திரன் என்பவரும் வெங்கடேசப்பாவை கொலை செய்ய வருவதை தெரிந்து, அவர்களுக்கு வீட்டு முன் கேட்டை சரஸ்வதி திறந்து விட்டதும் தெரிந்தது. இதையடுத்து வெங்கடேசப்பா கொலைக்கு காரணமான அவரது மருமகள் சரஸ்வதி, கள்ளக்காதலன் யுவராஜ் மற்றும் அவரது நண்பர் சந்திரன் ஆகிய மூன்று பேரையும் சூளகிரி போலீஸார் கைது செய்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top