ஏதோவொரு குளியல் வீடியோவை வைத்துக் கொண்டு சில மீடியாக்கள் ஹன்ஸிகாவின் பெயரை கெட்டப் பெயராக்கியதால் மனம் தளர்ந்து போன ஹன்ஸிகா சில நாட்கள் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்திருக்கிறார்.
இப்போது இது பற்றி ‘தினத்தந்தி’க்கு பேட்டியளித்திருக்கும் நடிகை ஹன்ஸிகா, “நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி வரும் செய்திகளையும் நடிகையாக இருப்பதற்காகவே அவர்கள் சகித்துக் கொண்டுதான் போக வேண்டும்..” என்று மன வருத்தமாக பேசியிருக்கிறார்.
ஹன்ஸிகா தன் பேட்டியில், “வாழ்க்கையில் மற்றவர்களுக்கு இல்லாத பெயரும், புகழும் நடிகைகளுக்கு கிடைப்பதை சாதகமாக கருதுகிறேன். நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை சில சமயங்களில் பாதிக்கப்படுவதை பாதகமாக கருதுகிறேன். ஒரு பிரபலம் என்பதால், அதை சகித்துக் கொண்டுதான் போக வேண்டும்.
எங்களைப் பற்றிய தவறான வீடியோக்கள், மார்பிங் புகைப்படங்கள் இணையவுலகத்தில் பரவி வருவது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம். சினிமாவில் நாங்கள் சொகுசு வாழ்க்கை வாழவில்லை. 365 நாட்களும் கஷ்டப்பட்டு உழைத்து, மற்றவர்களை சந்தோஷமாக வைத்து இருக்கிறோம். சிலருக்கு எங்களை இழிவுபடுத்துவதற்கு எப்படி மனசு வருகிறது என்று புரியவில்லை. இது, கற்பழிப்பைவிட கொடுமையானது. எங்கள் மனதை புண்படுத்துகிறவர்களை கடவுள்தான் தண்டிக்க வேண்டும். அந்த படத்தில் இருப்பது நான் அல்ல என்று எல்லோருக்கும் தெரியும். பின்னர் நான் ஏன் புகார் செய்ய வேண்டும்..?
எனக்கு அரசியல் வேண்டாம். சினிமா மட்டுமே போதும். அரசியல் எனக்கு புரியாது. காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை படப்பிடிப்பு. 6 மணியில் இருந்து இரவு 9 மணிவரை ‘ஜிம்.’ அதன் பிறகு சந்தோஷமாக தூங்குகிறேன். இந்த வாழ்க்கையே போதும். அரசியலுக்கு வந்துதான் சேவை செய்ய வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
மும்பை அருகில் உள்ள வாடாவில் ஆதரவற்றோருக்கும், முதியோருக்கும் இல்லம் கட்டி வருகிறேன். சினிமாவில் நடித்து கிடைக்கும் சம்பளத்தில் ஆதரவற்றோரையும், முதியோரையும் கவனித்துக் கொள்வது, நிம்மதி அளிக்கிறது..” என்று கூறியிருக்கிறார்.
0 comments:
Post a Comment