நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு வீரர்களின் அசத்தல் கூட்டணியும் காரணம். ஆரம்பத்தில் பாகிஸ்தானை பதம் பார்த்த இந்த வெற்றி கூட்டணி, தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என புரட்டியெடுத்தது.
இந்த வெற்றி அணிக்கு தலைமை தாங்கும் அணித்தலைவர் டோனி, சக வீரர்களுடன் நட்பை அதிகரிக்க, புது உத்தியை கையாள்கிறார்.
இவர் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் வென்றதும், ரெய்னா, அக்சர் படேலை அழைத்துக் கொண்டு அடிலெய்டில் உள்ள ஹொட்டலுக்கு மதிய உணவுக்கு சென்றார். அங்கு சூடான ‘கிரில் சிக்கனை’ அனைவரும் ஒரு பிடி பிடித்தனர்.
இந்நிலையில் இரண்டாவது லீக் போட்டியில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய இந்திய அணி, அடுத்த இரு போட்டிகளை பெர்த் மைதானத்தில் விளையாடுகிறது. இதற்காக இந்திய வீரர்கள் பெர்த்தின் ஹயாத் ஹொட்டலில் தங்கியுள்ளனர்.
போட்டிகள் இல்லாத காரணத்தால், வீரர்கள் மதிய உணவுக்கு வெளியே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இம்முறை கடும் வெயிலில் துணை அணித்தலைவர் விராத் கோஹ்லி, முகமது ஷமி ஆகியோரை அழைத்துக் கொண்டு விருந்துக்கு புறப்பட்டார் டோனி.
இந்த புதிய அணுகு முறையால் இந்திய வீரர்களிடையே ஒற்றுமை அதிகரித்து, இந்த வெற்றி கூட்டணி மேலும் வலுவாகும் என்பதே டோனியின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
0 comments:
Post a Comment