”இந்தப் படத்தில் எந்த விலங்குகளும் துன்புறுத்தப்படவில்லை விக்ரமைத் தவிர…” என்று ஃபேஸ்புக்கில் நக்கல் செய்கிற அளவுக்கு ‘ஐ’ படத்துக்காக தன் உடலை வருத்திக் கொண்டவர், நடிகர் விக்ரம்.
மேலும், ”இதோட நிறுத்திக்கங்க.., இதுக்கு மேல உங்க உடம்பை இயற்கைக்கு மாறா ஏதாவது செய்ய நினைச்சா, நிலைமை ரொம்ப சீரியஸாயிடும்” என்று டாக்டர்களே அவரை எச்சரித்து விட்டுப் போயிருக்கிறார்களாம்.
அந்தளவுக்கு படத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வாராம். அதனால் தான், எவ்வளவு இடைவெளி விட்டு அவருடைய படம் ரிலீசானாலும், தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அள்ளுகிறதாம்.
அப்படிப்பட்ட பாசக்கார ரசிகர்களை சந்திக்க விகாரம், மறுத்து கடைசி நேரத்தில் கழுத்தறுத்தாராம்.
பர்மாவில் தமிழ் அமைப்பு ஒன்றின் சார்பில் ஒரு நிகழ்ச்சிக்காக, விக்ரமை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறார்களாம். நிகழ்ச்சிக்காக அவரை நேரில் சந்தித்து அனுமதி கேட்டபோது ”நான் கண்டிப்பாக வருவேன்” என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறார் விக்ரம். அதன்பிறகு தான், அந்த நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டு சேல்ஸ் வேலையே ஆரம்பித்தனராம்.
வருவது விக்ரம் என்பதால் கிட்டத்தட்ட 90 சதவீத டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டதாம். நாளை விழா என்றால் முன்தினமான இன்று விழாக்குழுவினர் நிகழ்ச்சியை போன் செய்து நினைவுபடுத்த ” ஸாரி, என்னால வர முடியல” என்று ஒற்றை வரியில் சொல்லி அதிர்ச்சி கொடுத்தாராம் விக்ரம்.
பதறிப்போனா விழாக்குழுவினர், எவ்வளவோ கெஞ்சுப் பார்த்தும் முடியவே முடியாது என்று பிடிவாதம் பிடித்தாராம். பின் கடைசி நேரத்தில் வேறு யாராவது திரையுலக பிரபலம் கிடைப்பார்களா? என்று அலைந்திருக்கிறார்கள் விழாக்குழுவினர். கிடைத்தது என்னமோ ஏமாற்றம் தானாம்.
இதனால் நிகழ்ச்சிக்கான டிக்கெட் பணத்தை திருப்பிக் கொடுத்ததோடு விக்ரமின் இந்த ‘கழுத்தறுப்பு’ விஷயத்தையும் ரசிகர்களிடம் சொல்லி குமுறியிருக்கிறார்களாம். இதனால் பர்மாவில் உள்ள ரசிகர்கள் எல்லாம், விக்ரம் மீது கடுமையான கொந்தளிப்பில் இருக்கிறார்களாம்!
0 comments:
Post a Comment