↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
முற்காலத்தில் நமது பாட்டன் ஊருக்கு ஒரு வீடு கட்டியதன் கரும விதிப் பலன்களினால் இன்று பேரப்பிள்ளைகள் செங்கல் வாங்கவே முடியாமல் அலைகின்றனர். சமீபத்திய கணக்கெடுப்பின் படி 1௦௦௦ ஆண்களுக்கு 854 பெண்கள் தான் சராசரியாய் நமது இந்திய திருநாட்டில் உள்ளார்கள் என நமது இதயத்தில் பேரிடியை இறக்குகிறது. ஆதலால், தேர்வு செய்து துணியை அணைத்தக் காலம் எல்லாம் மலையேறி போய்விட்டது.
முன்பாவது பேருந்து நிலையம், கல்லூரி வாசல் என பொது இடங்களில் பெண்களைப் பார்த்து காதல் தூது விட்டு மனம் முடிக்க முடிந்தது. ஆனால் இன்றைய இளசுகளின் நிலையோ மிகவும் பரிதாபம். சாலையில் தலைகுனிந்து நடக்கும் மங்கையர் எல்லாம் குடும்ப குத்துவிளக்கு என முடிவு செய்துவிடாதீர்கள் அவர்கள் குடிப்பெயர்ந்து இருப்பது முகப்புத்தக வாசலில். மற்றும் அவர்களது சமூகம் சோசியல் நெட்வொர்க்காக மாறியுள்ளது.
சமூக வலைத்தளத்தில் உண்மையான பெண்களை கண்டுக்கொள்வதே சிரமம். அதிலும் அவர்களை காதலில் கரம்பிடிப்பது என்பது நடுக்கடலில் சுறாமீனை பிடிப்பதுப் போல. ஆனால் நமக்கு வேறு வழியில்லை 854'வதையாவது நீங்கள் கரமப் பிடிக்க வேண்டுமெனில், சமூக வலைத்தளத்தில் மீன் பிடித்துத் தான் ஆக வேண்டும். சுறாவோ? மத்தியோ? அது உங்களது திறனைப் பொருத்தது. சரி வாருங்கள் மீன் பிடிக்க கற்றுக்கொள்ளலாம்...
ஒருவேளை நீங்கள் தேடிய தேவதை உங்களது நட்பினை ஏற்றுக்கொண்டால். உடனே அவர்களது ஃபேஸ்புக் வாலில் தோழமையை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி என போஸ்ட் செய்வதை நிறுத்துங்கள். இது பெண்கள் மத்தியில் நம்மை "வழிகிற" லிஸ்ட்'டில் சேர்த்துவிடும். எக்காரணம் கொண்டும் இந்த தவறை மட்டும் தவறியும் செய்துவிடாதீர்கள். முதலில் கோணலாவது, முற்றிலும் கோணலாகிவிடும் என்ற பழமொழி ஞாபகம் இருக்கிறது அல்லவா.
வழிதல் தான் கூடாது. ஆனால், உங்களது கனவு கன்னி முகப்புத்தகத்தில் இடும் ஒவ்வொரு போஸ்ட்டிற்கும் நீங்கள் தவறாது லைக் போட வேண்டும். அதிலும் மறவாது அவர்கள் புகைப்படம் பகிரும் போது கட்டாயம் கமெண்ட் செய்வது அவசியம் ஆகும்.
என்றேனும் தெரிந்தோ, தெரியாதோ அவர்கள் சுயப்புராணம் புலம்புவதை தவிர்த்து. ஏதேனும் சமூகத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்ற போஸ்ட் எதாவதை ஷேர் செய்வார்கள். இந்த தருணம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. ஏன் என்றால் இந்த வாய்ப்பு விட்டால் கிடைக்காது, போனால் திரும்ப வராது. ஆகையால், இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அவர்கள் ஷேர் செய்த போஸ்ட்டை. அவர்களது பெயரை "டேக்" (tag) செய்து. ஆமாம் நீங்கள் சொல்வது சரி. நான் உங்களை முன்மொழிகிறேன் என்றெல்லாம் பீலாய் விட்டு உங்கள் வாலில் அதை ஷேர் செய்ய வேண்டும். இதுதான் அவர்களுக்கு நூல் விட சரியான தருணம்.
உங்களது தேவதை ஆன்லைன் வரும் போதெல்லாம். "ஹாய், ஹாய்.." என்று செய்தி அனுப்பி தொல்லை செய்வதை அறவே செய்தல் கூடாது. இங்கு தான் நமது பொறுமைக்கு அவர்கள் பயிற்சி வைப்பார்கள். பொறுமை ரொம்பவே முக்கியம் தோழரே. காத்திருந்து தான் ஆக வேண்டும். ஒருமுறை "ஹாய்" சொல்லிவிட்டு மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். கண்டிப்பாக ஒருநாள் உங்கள் தேவதையிடம் இருந்து ரிப்ளை வரும்.
அவ்வப்போது நீங்கள் உங்களை நல்லவர் போன்றும், நான் யோக்கியன் என்பது போலவும் போஸ்ட் செய்தல் வேண்டும் அதுவும் இலைமறைக் காயாய். அப்பட்டமாக நீங்கள் தம்பட்டம் அடிப்பது தெரிதல் கூடாது. இதில் முக்கியமான ஒன்று இந்த போஸ்ட்டில் அவர்களை டேக் (tag) செய்தல் மிகவும் அவசியம்.
இப்படி எல்லாம் செய்தால் அவர்களது காதல் உங்களக்கு கிடைத்துவிடும் என்ற தப்பு கணக்கு எல்லாம் போடக்கூடாது. அவர்களோடு குறுஞ்செய்தியில் உரையாட வாய்ப்புகள் அமையும் அவ்வளவு தான். இந்த வாய்ப்பில் தான் நீங்கள் உங்களை முழுவதுமாய் அவர்கள் விரும்பும் வகையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். நாம் இத்தனை நாட்களாய் காத்திருந்தது இந்த காயை கனிய வைக்கத் தான். இந்த சாட்டிங்கில் நீங்கள் சற்று நாகரீகமானவராகவும், கேளிக்கை பண்புடையவராகவும் இருப்பது போல நகர்த்தி செல்தல் வேண்டும்.
மேற்கூறியவை எல்லாம் சரியாக செய்தாலும் உங்களுக்கு சற்று லக்கும், லுக்கும் தேவைப்படுகிறது. அது மட்டும் உங்களுடன் இருந்தால். சமூக வலைத்தளத்தில் என்ன, சமுத்திரத்தில் கூட நீங்கள் வலை வீசி மீன் பிடிக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment