படத்தில் வரும் ஒரு 10 நிமிட காட்சிக்காக தன்னுடைய உடம்பை ஏற்றி, இறக்கி நடித்திருப்பார் விக்ரம். இவரின் நடிப்பை பார்த்த அனைவரும் வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதோடு அவருக்கு தேசிய விருது எல்லாம் கிடைக்கும் என பலரும் கூறியிருந்தனர்.
ஆனால் விக்ரமோ, அப்போது வலுக்கட்டாயமாக உடலைக்கூட்டி குறைத்ததன் வேதனையை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறாராம்.
கடுமையான உடற்பயிற்சி, வலுக்கட்டாயமாக மேற்கொண்ட டயட், உட்கொண்ட சில மெடிசின்கள் காரணமாக சில பிரச்சனைகளால் அவதிப்படுவதோடு, தோற்ற பொலிவைக் கொண்டுவர மிகவும் சிரமப்படுகிறாராம்.
வெளிநாட்டிற்கு சென்று இதற்கான சிகிச்சை பெற்று வர தற்போது விக்ரம் தீர்மானித்துள்ளாராம். விக்ரமின் இந்த வேதனைக்கு காரணம் ஷங்கர் தான் என்று பலர் கூறி வருகின்றனர்.
0 comments:
Post a Comment