↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
‘U’ சான்றிதழ் பெற்றுள்ள முதல் பேய்ப் படம் ‘ஓம் சாந்தி ஓம்’
‘யு’ சான்றிதழ் பெற்றுள்ள முதல் பேய்ப் படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது ‘ஓம் சாந்தி ஓம்’ திரைப்படம்.
வழக்கமாக பேய் ,பிசாசு, ஆவி சம்பந்தப்பட்ட  படங்கள் என்றால் பயமுறுத்தும் திகில் படங்கள் என்றுதான் கருதப்படும். அண்மைக் காலமாக இப்படிப்பட்ட படங்கள் நகைச்சுவை கலந்து வரும்போது ரசிக்கப்படுகின்றன. ‘பிசாசு’, ‘டார்லிங்’ படங்களின் வெற்றிக்குப் பின்னர் குடும்பத்தினர் விரும்பி ரசிக்கும் நட்சத்திரங்களாக  பேய்களும் ஆவிகளும், மாறி வருகின்றன.
நடிகர் ஸ்ரீகாந்த் நடித்திருக்கும் ‘ஓம் சாந்தி ஓம்’ படம் ஆவி சம்பந்தப்பட்ட கதை என்றதும் திடீரென்று இப்படத்துக்கு எதிர்பார்ப்பும் வணிக வியாபார விசாரணைகளும் அதிகரித்து வருகின்றன.
இந்தப் படத்தில் நாயகன் ஸ்ரீகாந்துடன் நீலம் உபாத்யாயா நாயகியாக நடிக்கிறார். மேலும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜூனியர் பாலையா, ‘ஆடுகளம்’ நரேன், மலையாள நடிகர் பைஜூ, வினோதினி வைத்தியநாதன் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.
வழக்கமாக எல்லா படங்களிலும் கொடூரமான வில்லனாக மிரட்டும் ‘நான் கடவுள் ‘ராஜேந்திரன், இப்படத்தில் ‘வவ்வால் பாண்டி’யாக முழு நீள நகைச்சுவை பாத்திரத்தில் நடித்து கலகலப்பூட்டி கலக்கியிருக்கிறார். 
படத்தை இயக்கியுள்ளவர் டி.சூர்யபிரபாகர். இவர் இயக்குநர்கள் எஸ்.ஜே.சூர்யா, ராஜேஷ்.எம் ஆகியோரிடம் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். ஒளிப்பதிவு – கே.எம். பாஸ்கரன், இசை – விஜய் எபிநேசர்.
8 பாயிண்ட் எண்டர் டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் இந்தப் படத்தினைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் பி.அருமைச்சந்திரன் இந்தப் படம் பற்றிக் கூறும்போது.. “இது ஆவி சம்பந்தப்பட்ட திகில் மற்றும் நகைச்சுவை கலந்த கதை. ஐந்து ஆத்மாக்கள் சம்பந்தப்பட்ட கதை. இப்படம் முழுக்க, முழுக்க குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளைக் கவரும்படி இருக்கும்.  
வழக்கமாக தணிக்கைத் துறையினர் திகில் படங்களுக்கு ‘யு/ஏ’ சான்றிதழ்தான் கொடுப்பார்கள். ஆனால் இப்படத்துக்கு மட்டும்தான் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். ‘பேய், ஆவி சம்பந்தப்பட்ட படமாக இருந்தாலும் குழந்தைகளும் ரசிக்கும்படி நகைச்சுவையாக
சொல்லியிருக்கிறீர்கள்’ என்று அவர்களே பாராட்டினார்கள்.
ஆவி என்றால் பயப்பட வேண்டாம். ஆவிகள் எல்லாம் பாவிகள் அல்ல. அவை நம் முன்னோர்களின் ஆத்மாக்கள்தான். அவைகள் வருவது நம்மை பயமுறுத்த அல்ல; நம்மை ஆசீர்வதிக்கத்தான் என்கிற புதிய பரிமாணத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
ஆவி பற்றிய அச்சம், நகைச்சுவை இவற்றுடன் கல்வி வியாபாரமாவது, மருந்து கலப்படம் போன்ற சமூகக் கருத்தையும்  சேர்த்து சொல்லியிருக்கிறோம்..” என்கிறார்.
திருச்சியில் கதை நடந்தாலும் சிங்கப்பூர், மலேசியாவில் மட்டுமல்ல இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல்முறையாக கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோவிலிலும் இதன் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்.
ஆவி. பேய் தொடர்பான படங்களின் கதைகள்  பொதுவாக பழைய பங்களா, காடு, மலை என்று சில குறிப்பிட்ட இடங்களில்தான்  சுழலும். இப்படம் அதுபோல இல்லாமல் பாடல் காட்சிகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்று சுமார் ஒன்றரை கோடிவரை செலவிட்டு படமாக்கப்பட்டுள்ளது.
இந்த ஜாலியான  ஆவி கதை விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top