கடந்த 2010ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சென்றிருந்த போது, சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக 6 மாத காலம் சிறைத் தண்டனையும், 5 ஆண்டுகால தடையும் முகமது அமீருக்கு விதிக்கப்பட்டது.
இவரது தடை செப்டம்பர் 2, 2015ம் திகதியுடன் முடிவடைகிறது, ஆனால் விசாரணைகளுக்கு முகமது அமீர் சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கியதாலும், தனது குற்றங்களை ஒப்புக் கொண்டதாலும் சிறப்பு சலுகை வழங்கப்பட்டு முன்னதாகவே தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி ஊழல் தடுப்பு அமைப்பு தலைவர் ரோனி பிளானகன் கூறியதாக ஐசிசி செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதாவது, 17 வயதில் தடை செய்யப்பட்ட அமீர் தற்போது 22வது வயதில் மீண்டும் பாகிஸ்தான் மைய நீரோட்டத்திற்கு திரும்பியுள்ளார்.
0 comments:
Post a Comment