உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் ஐதராபாத் நகரில் நடந்த 'யசோதா சர்வதேச புற்றுநோய் கருத்தரங்கு' ஒன்றில் கலந்து கொண்டார். அவருடன் கவுதமி மற்றும் அவரது மகள் சுப்புலட்சுமி ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கில் பேசிய கமல்ஹாசன், 'நான் 200 படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும், உண்மையான ஹீரோ கவுதமிதான் என்பதை புற்றுநோயில் இருந்து மீண்டெழுந்து நிரூபித்துவிட்டார். நான் சினிமாவில் மட்டும் ஹீரோவாக நடித்தேன். ஆனால் என்னுடைய ரியல் ஹீரோ கவுதமிதான்' என்று கூறினார்.
மேலும் யசோதா புற்றுநோய் பவுண்டேஷன், புற்றுநோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருவதாகவும், அவர்களுடைய பணிகள் மென்மேலும் சிறக்க, தான் வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார்.
இந்த கருத்தரங்கில் கவுதமி பேசியபோது, 'மருத்துவர்களின் உதவியால்தான் தன்னால் புற்றுநோயில் இருந்து விடுபட முடிந்தது என்றும், புற்றுநோய் குறித்து நிறைய விஷயங்களை மருத்துவர்கள் என்னிடம் விளக்கமாக கூறியதால்தான் அந்நோய் குறித்து விழிப்புணர்ச்சி தனக்கு ஏற்பட்டதாகவும் கூறினார். மருத்துவர்கள் புற்றுநோய் நோயாளிகளுக்கு அந்நோய் குறித்து முழு விளக்கத்தையும் பொறுமையாக கூறினால் என்னை போல பல நோயாளிகள் இந்நோயில் இருந்து மீண்டுவர சாத்தியம் உள்ளது என்று கூறினார்.
0 comments:
Post a Comment