பாலிவுட் நடிகர் அக்சயகுமார் நடித்த 'பேபி' திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸான நிலையில் இந்த படத்தை பாகிஸ்தான் நாடு தடை செய்துள்ளது. இதுகுறித்து பிரபல பாலிவுட் படத்தயாரிப்பாளர் திபாகர் பானர்ஜி கூறியபோது, இது மிகவும் வருந்தத்தக்க முடிவு என்று கருத்து கூறியுள்ளார்.
இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து இருநாடுகளும் தொடர்ந்து நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்று கருத்து கூறிய திபாகர், இதுகுறித்து இருநாட்டு அரசு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுவரை நான் பேபி படத்தை பார்க்கவில்லை என்றும், அந்த படத்தின் ரிசல்ட் என்னவென்று கூட நான் படிக்கவில்லை என்றும் கூறிய திபாகர், பாகிஸ்தான் நாடு என்ன காரணத்திற்காக தடை செய்தது என்பது குறித்து நான் விவாதிக்க விரும்பவில்லை என்றும், கலைஞர்களுக்கு இனம், மொழி, நாடு ஆகிய வேற்றுமைகள் கிடையாது என்றும் கூறியுள்ளார்.
அக்சயகுமார், ராணா டக்குபாய், டாப்சி, மற்றும் பாகிஸ்தான் நடிகர் மிக்கால் ஜல்பிகார் மற்றும் ரஷீத் நஸ் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை நீரஜ் பாண்டே இயக்கியுள்ளார்.
0 comments:
Post a Comment