புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? என்ற பலமொழிக்கு மிகவும் பொருத்தமானவர் ஸ்ருதிஹாசன். தமிழ் பேசத்தெரிந்த பாலிவுட் ஹீரோயின் போல் ஜொலிக்கும் ஸ்ருதி, உலக நாயகனின் கலை வாரிசு. சிறு வயதில் இருந்தே இசை மீது கொண்ட ஆர்வத்தால் அமெரிக்கா சென்று இசை பயின்றார்.
இதை தொடர்ந்து தேவர் மகன் படத்தில் போற்றி பாராடி பெண்ணே என்ற பாடலை தன் மழலை குரலால் பாடி அனைவரையும் கவர்ந்தார். அதை தொடர்ந்து தன் கவர்ந்து இழுக்கும் காந்த குரலால் ஹேராம் படத்தில் இவர் பாடிய பாடல் மிகவும் பிரபலமடைந்தது.
ஸ்ருதியின் அம்மா சரிகா ஒரு பாலிவுட் ஹீரோயின் என்பதால், அதே ரத்தமான ஸ்ருதி முதன் முதலாக லக் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இருந்தாலும் அவருக்கு இசை மீது தான் அதிக ஆர்வம், அதனால் தன் தந்தை இயக்கிய உன்னை போல் ஒருவன் படத்திற்கு இசையமைத்து, அந்த வருடத்தில் சிறந்த அறிமுக இசையமைப்பாளர் என்ற விருதையும் பெற்றார்.
ஆனால், தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பது போல் தந்தையை போன்றே நடிப்பு துறையில் கலக்க தமிழ் சினிமாவில் 7ம் அறிவு படத்தில் அறிமுகமானார். இப்படம் இவருக்கு சரியான அங்கிகாரம் கொடுக்கவில்லை என்றாலும், இதை தொடர்ந்து இவர் நடித்த 3 படம் இவரை ஒரு சிறந்த நடிகையாக தமிழ் சினிமாவிற்கு அடையாளம் காட்டியது.
ஆனால், இவரின் வெற்றி தெலுங்கு தேசத்தில் தான் இருந்தது போல, அங்கு அவர் நடித்த ஓ மை பிரண்ட், ரேஸ்குரோம், கப்பர் சிங், பல்பு, எவடு ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்று தெலுங்கு சினிமாவின் நம்பர் 1 நடிகையாகி விட்டார். அது மட்டுமில்லாமல், பாலிவுட்டிலும் டி டே, ராமையா வஸ்தாவையா என இவர் நடித்த படம் ஹிட் அடிக்க ஸ்ருதி மார்க்கெட் ராக்கேட் வேகத்தில் உயர்ந்தது.
தற்போது இவர் விஜய், மகேஷ் பாபு போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் தன் தந்தை என்ன தான் இந்திய அளவில் உச்சத்தில் இருந்தாலும், அவரின் எந்த ஒரு சப்போர்ட்டும் இல்லாமல் வாழ்க்கையில் இந்த இடத்தை எட்டியுள்ளார். இன்னும் பல சாதனைகளை தன் திரைப்பயணத்தில் படைக்கவிருக்கும் ஸ்ருதிஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
0 comments:
Post a Comment