இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.சி.ஸ்ரீராம். தற்போதுள்ள பல ஒளிப்பதிவாளர்களுக்கு இவர் தான் குருநாதர், இவரின் பட்டறையில் இருந்து வெளிவந்த பல ஒளிப்பதிவாளர்கள் தான் இன்று திரையுலகை ஆட்சி செய்து வருகின்றனர்.
1956ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி மண்ணுலகில் காலடி எடுத்து வைத்த இவர், சிறு வயதிலேயே சினிமா மீது கொண்ட மோகத்தால், தன் உயர் நிலைக்கல்வியை சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்றார். இதன் பின் நமக்கு கேமரா தான் சரி, என்று மிகவும் தீர்க்கமான முடிவை எடுத்து இயக்குனர் மௌளி இயக்கிய நன்றி மீண்டும் வருக படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.
சினிமாவில் ஒரு மனிதன் ஓடுவதே அவன் வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்பதற்காக தான், யாருக்கும் இருட்டு என்றால் பிடிக்காது, ஆனால், இருளுக்கும் ஒரு அழகு உண்டு என்று மெழுகு வர்த்தி ஒளியில் படத்தை எடுத்து அதை ரசிக்க வைத்தவர்.
இன்று தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் என்று புகழப்படும் மணி ரத்னம், ப்ரியதர்ஷன், கமல்ஹாசன் என அனைவருடனும் பணிபுரிந்தவர் இவர். இவரின் ஒளிப்பதிவிற்கு மகுடமான அமைந்த படங்கள் நாயகன், தேவர் மகன், மௌன ராகம், அலைப்பாயுதே, முகவரி என்று சொல்லிக் கொண்டே போகலாம். மேலும், நாயகன், கீதாஞ்சலி படத்திற்காக இரண்டு முறை தேசிய விருதை வாங்கியுள்ளார்.
இவரின் குடும்பத்தில் நடந்த ஒரு துயர சம்பவத்தால் மிகவும் மனமுடைந்து சில நாட்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர், தற்போது அதற்கான ஆறுதலும் சினிமாவில் தான் இருக்கிறது என மீண்டும் ஷமிதாப், ஓகே கண்மனி என தன் பழைய பலத்துடன் களம் இறங்கிவிட்டார்.
அதிலும் குறிப்பாக தற்போது திரையில் வெற்றிகரமான ஓடிக்கொண்டு இருக்கும் ஐ படத்தில் இவரின் ஒளிப்பதிவை பாராட்டதவர்கள் யாரும் இல்லை, அத்தனை அழகான காட்சிகளை இப்படத்தில் அவர் கண் வழியாக நமக்கு விருந்து வைத்தார். இந்த மகா கலைஞனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
0 comments:
Post a Comment