தற்போது அவுஸ்திரேலியா ஹாட்ரிக் வெற்றியின் மூலம் (3 போட்டி, 3 வெற்றி, 13 புள்ளி) இறுதிப் போட்டிக்கு முன்னேறி விட்டது.
இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி (3 போட்டி, 1 வெற்றி 5 புள்ளி, +0.481 ஓட்டவிகிதம்) இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியா (2 போட்டி, 2 தோல்வி, –1.356 ஓட்டவிகிதம்) மூன்றாவது இடத்தில் உள்ளது.
அடுத்து நடக்க உள்ள அவுஸ்திரேலியா (ஜனவரி-26), இங்கிலாந்துக்கு (ஜனவரி-30) எதிரான இரு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் எவ்வித பிரச்சனையுமின்றி, இறுதிப் போட்டிக்கு முன்னேறலாம்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக போனஸ் புள்ளியுடன் வென்றால் 5 புள்ளி கிடைக்கும். ஒருவேளை தோற்றால், அடுத்து இங்கிலாந்துக்கு எதிராக போனஸ் புள்ளியுடன் வெற்றி பெற வேண்டும்.
பின் ஓட்டவிகித அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு (பெப்ரவரி 1) செல்லும் அணி முடிவு செய்யப்படும்.
0 comments:
Post a Comment