இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவரும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் , 1971–ம் ஆண்டு ஒருநாள் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது.
அப்போது அது டெஸ்ட் போட்டி போன்ற நிலையில் இருந்தது. 200 ஓட்டங்கள் எடுத்தாலே நல்ல ஸ்கோராக இருந்தது.
தற்போது 20 ஓவர் போட்டி போலவே ஒருநாள் போட்டி மாறிவிட்டது. நவீன ஒருநாள் போட்டியில் முடியாதது எதுவுமில்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
பவுண்டரி எல்லை சுருக்கப்பட்டது. பவுன்சர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்களை மகிழ்ச்சியூட்டும் வகையில் துடுப்பாட்ட வீரர்கள் பவுண்டரி, சிக்சர்களாய் அடிக்கிறார்கள். இதனால் புதிய சாதனைகள் படைக்கப்படுகின்றன.
தென் ஆப்பிரிக்க அணி அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 434 ஓட்டங்கள் இலக்கை கடைசி பந்தில் சேஸ் செய்தது.
அந்த அணி சமீபத்தில் மேற்கிந்திய அணிக்கு எதிராக 439 ஓட்டங்கள் குவித்தது. டிவில்லியர்ஸ் குறைந்த பந்தில் (31 பந்தில்) சதம் அடித்து சாதனை படைத்தார்.
1996–ல் அப்ரிடியின் சாதனையை (37 பந்தில் சதம்) கடந்த ஆண்டு ஆண்டர்சன் ஒரு பந்தில் முறியடித்தார். (36 பந்தில் சதம்) இதை முறியடிக்க முடியாது என்று கூறப்பட்ட நிலையில் தான் 5 பந்து வித்தியாசத்தில் டிவில்லியர்ஸ் முறியடித்தார்.
இதனால் நவீன கிரிக்கெட்டை பொறுத்தவரை எதுவும் நடக்கலாம். முடியாதது என்று ஒன்று மில்லை என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment