முத்தரப்பு ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
மோசமான துடுப்பாட்டம் மட்டுமின்றி, பந்துவீச்சும் இந்திய அணிக்கு கைகொடுக்கவில்லை. இந்திய பந்து வீச்சாளர்களால் 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
இந்நிலையில் இந்திய பந்துவீச்சாளர்கள் வெளிநாட்டுப் பயணத்தில் இருந்து இன்னும் பாடம் கற்கவில்லை என முன்னாள் இந்திய அணித்தலைவர் கவாஸ்கர் சாடியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், கடந்த கால அனுபவங்களில் இருந்து பந்துவீச்சாளர்கள் இன்னும் எதையும் கற்காதது வேதனையே.
உலகக்கிண்ண போட்டிக்கு பந்துவீச்சாளர்களில் எனது முதல் தெரிவு புவனேஸ்வர்குமார், முகமது ஷமி ஆக இருக்கும்.
ஸ்டூவர்ட் பின்னி அடுத்த நிலையில் உள்ளார். அதன் பிறகு 2 சுழற்பந்து வீரர்கள் இருக்க வேண்டும்.
பின்னியுடன் தெரிவு செய்யப்படும் 2 சுழற்பந்து வீரர்களும் சிறப்பாக துடுப்பாட்டம் செய்யக்கூடியவர்கள்.
மேலும் திறமை வாய்ந்த துடுப்பாட்டக்காரரான விராட் கோஹ்லி கடந்த 2 ஆட்டத்திலும் சரியாக ஆடாவிட்டாலும் இனிவரும் போட்டிகளில் நல்ல நிலைக்கு திரும்புவார் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment