↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஸ்ரீதேவியை திருமணம் செய்வதற்கு முன்பு போனிகபூர் கடந்த 1988ஆம் ஆண்டு  Mona Shourie Kapoor என்பவரை திருமணம் செய்திருந்தார். பின்பு அவரே 1996ஆம் ஆண்டு ஸ்ரீதேவியை திருமணம் செய்வதற்காகவே விவாகரத்து செய்தார். இவர்களுக்கு பிறந்தவர்தான் அர்ஜூன் கபூர். இவர் தற்போது பாலிவுட்டில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.
சமீபத்தில் காபி வித் கரண் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேட்டியளித்த அர்ஜூன் கபூர், தன்னுடைய தாயாரின் வாழ்க்கையை கெடுத்தவர் ஸ்ரீதேவி என்றும், என்றுமே அவரை நான் சித்தியாக ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் அவர் என்னுடைய தந்தையின் மனைவி என்ற அளவில் மட்டுமே நான் அவரை கருதுவதாகவும் தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவியின் இரு குழந்தைகளையும் தான் ஒருபோது உடன்பிறந்தவர்களாக எண்ணுவதில்லை என்று தெரிவித்த அவர், ஆனாலும் தந்தையின் மீது இப்போதும் அளவுக்கதிமாக பாசம் வைத்துள்ளதாக தெரிவித்தார்.
எனது ஒரே தங்கை  Anshula Kapoor என்று கூறியுள்ள அர்ஜூன் கபூருக்கு இன்னும் ஸ்ரீதேவி மீது உள்ள கோபம் தீரவில்லை என்பது அவரது பேட்டியில் தெரிகிறது. இவரது தாயார் Mona Shourie Kapoor கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி மரணமடைந்துவிட்டார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top