↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஒருவருக்கொருவர் நேரடியாக வீடியோ மூலம் பார்த்து, பேசிக் கொள்ளவும், உடனடியாக மெசேஜ் அனுப்பவும், தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும்,
ஸ்கைப் புரோகிராம், 2003 ஆம் ஆண்டு முதல், பத்தாண்டுகளுக்கு மேலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தினந்தோறும் 3 கோடியே 30 லட்சம் மணி நேர இயக்கத்தினை ஸ்கைப் மேற்கொண்டு வருகிறது. வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில் இதுவே முதல் இடத்தை பல ஆண்டுகளாகக் கொண்டுள்ள புரோகிராமாக இயங்கி வருகிறது. கம்ப்யூட்டர், மொபைல் போன், ஸ்மார்ட் டி.வி., மற்றும் சில கேம்ஸ் கன்சோல்களிலும் ஸ்கைப் இப்போது இயங்கி வருகிறது. இதனை சில ஆண்டுகளுக்கு முன், மைக்ரோசாப்ட் நிறுவனம் விலை கொடுத்து வாங்கி தனதாக்கிக் கொண்டது.
இதனைப் பயன்படுத்துவது இலவசம் என்றாலும், நம் கம்ப்யூட்டரில் இதனை இன்ஸ்டால் செய்தே பயன்படுத்த முடியும். நாம் வெளியே உள்ள இடங்களில், அங்கு காணப்படும் கம்ப்யூட்டரில் ஸ்கைப் பயன்படுத்த எண்ணினால், அதில் ஸ்கைப் புரோகிராம் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்க வேண்டும். பின்னர் தான், அதனை இயக்கி, நம் யூசர்நேம் பாஸ்வேர்ட் கொடுத்து, உள்ளே சென்று, நம் நண்பர்களை அழைத்துப் பேச முடியும்.
இந்த சிக்கலைத் தீர்க்கும் வகையில், மைக்ரோசாப்ட் பிரவுசரிலேயே இயங்கும் வகையில் ஸ்கைப் அப்ளிகேஷனைத் (Skype for Web) தர முடிவெடுத்து, தற்போது அதற்கான சோதனைத் தொகுப்பினைத் தந்துள்ளது.
இதனைச் சோதனை செய்து பார்க்க, அழைப்பிதழ் முறையில் வாடிக்கையாளர்கள் சிலருக்கு அனுமதி அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
Skype.com இணைய தளம் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஸ்கைப் அக்கவுண்ட்டில் நுழைந்து, இன்ஸ்டண்ட் மெசேஜிங், வாய்ஸ் மற்றும் விடியோ சேட்டிங் ஆகியவற்றைப் பயன்படுத்த முடியும். இதுவரை இல்லாத வகையில், இது விரைவாகவும், எளிதாகவும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் விடியோ வழி உரையாடல் மேற்கொள்ள இயங்கும். எனவே, இனி அப்ளிகேஷனாக ஸ்கைப்பினைப் பயன்படுத்தாமல், இணையதளம் ஒன்றிலிருந்து நேரடியாகப் பயன்படுத்தலாம். இதனால், நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் ஸ்கைப் இன்ஸ்டால் செய்திருக்கத் தேவை இல்லை. இணைய இணைப்பு மட்டும் இருந்தால் போதும்.
விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்துபவர்களுக்கு, வெப் ஸ்கைப், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10 மற்றும் அதன் பின் வந்த பதிப்புகளில் கிடைக்கிறது. அதே போல, குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளில் இது கிடைக்கிறது. மேக் கம்ப்யூட்டர் பயனாளர்கள், சபாரி பதிப்பு 6 அல்லது அதற்குப் பின் வந்தவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
தொடக்கத்தில், வெப் ஸ்கைப் பயன்படுத்த ஒரு ப்ளக் இன் தேவைப்படும். ஆனால், மைக்ரோசாப்ட் இது தொடக்கப் பயனாளர்களுக்கு மட்டுமே. பின்னால் வருபவர்களுக்கு இது தேவைப்படாது என்று அறிவித்துள்ளது. தற்போதைக்கு அழைப்பிதழ் ஸ்கைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு திடீர் என வழங்கப்படுகிறது. நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால், விழித்திருங்கள். உங்களுக்கும் அழைப்பு வரலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment