↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
சமூக இணைய தளமாக பன்னாடெங்கும் புகழ் பெற்று, பயன்படுத்தப்படுவது பேஸ்புக். அண்மையில் இத்தளத்தில் புதிய வசதி ஒன்று தரப்பட்டுள்ளது. நம்மோடு நம் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு, விரும்புவதாக ஊக்கம் கொடுத்து, பதில் அளித்து, தட்டிக் கொடுத்து வரும் நண்பர்களுக்கு, நன்றி சொல்லுமாறு பேஸ்புக் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கு தனியே செய்தி அனுப்பாமல், இதன் நன்றி பக்கத்திற்குச் செல்ல வேண்டும். பேஸ்புக்கில் உங்கள் அக்கவுண்ட்டில் லாக் இன் செய்து, பின்னர் இந்த தளத்திற்குச் செல்லுங்கள். இங்கு இடதுபக்கம், உங்கள் நண்பர்கள் பட்டியல், ஆங்கில மொழிக்கான அகர வரிசையில் இருக்கும். இதில் உங்கள் நண்பர் ஒருவரை தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால், உடன் சிறிய விடியோ நன்றி கூறும் முகத்தான் தரப்படும்.
இதனை உங்கள் பக்கத்தில் போஸ்ட் செய்திட வலது மேலாக ஒரு பட்டன் தரப்பட்டிருக்கும். இந்த விடியோவில், உங்கள் நண்பருடன் நீங்கள் பகிர்ந்து கொண்ட போட்டோக்கள் சில தேர்ந்தெடுக்கப்பட்டு, நன்றி கூறும் வாசகங்களுடன் காட்டப்படும். அவர் அனுப்பிய செய்திகள், நீங்கள் இருவரும் பகிர்ந்து கொண்ட வாழ்த்துகள், முக்கிய செய்திகள் இடம் பெறும். பின்னணியில் நல்ல இசை இசைக்கப்படும். ஒரு நிமிடம் ஓடும் வகையில் இந்த காணொளிப் படம் தயாரிக்கப்படுகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டோக்கள், தனித்தனியாகக் கீழே காட்டப்பட்டு ஒவ்வொன்றிலும், தேர்ந்தெடுக்கப்பட்டதன் அடையாளமாக டிக் அடையாளம் இருக்கும். நீங்கள் சில போட்டோக்களை விரும்பவில்லை என்றால், டிக் அடையாளத்தை எடுத்துவிடலாம். புதியதாக போட்டோக்களை இணைக்க விரும்பினால், தேர்ந்தெடுத்து இணைக்கலாம். மொத்தம் 15 போட்டோக்களை இணைக்கலாம்.
நண்பர்களைத் தேர்ந்தெடுக்கையில், பேஸ்புக் அவர்களை மூன்று வகையாகப் பிரித்து, theme எனத் தருகிறது. அவை Old Friends, Friendsமற்றும் Family. இதிலும் உங்களுக்குத் தேவையான பிரிவைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். அதற்கேற்ப படத்தில் சில காட்சிகளும் வாசகங்களும் மாறும்.
இப்படி உங்கள் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி கூறும் விடியோக்களை உருவாக்கி, உங்கள் பக்கத்தில் போஸ்ட் செய்திடலாம். இதில் கவனம் தேவை. ஒருவருக்கு நன்றி கூறிவிட்டு, இன்னொருவருக்குக் கூறவில்லை என்றால், அவர் கோபம் கொண்டு உங்கள் தொடர்பினைத் துண்டிக்கலாம். எனவே, முதலில் உங்களுக்கு நன்றி கூறி விடியோ அனுப்பியவர்களுக்கு, நீங்களும் ஒன்று அனுப்புங்கள். பின்னர், உங்கள் நண்பர்களைத் தேர்ந்தெடுத்து விடியோ தயார் செய்து பதிந்திடுங்கள். இவ்வாறு விடியோ தயாரிக்க எண்ணிக்கை அளவில்லை. எனவே, அனைத்து நண்பர்களுக்கும் தயார் செய்து அனுப்புங்களேன்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment