↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கத்தி படத்தின் பிரச்சனை சாதரணமாக தீராது போல. சில நாட்களாக இல்லாத பிரச்சனை மறுபடியும் ஆரம்பித்து விட்டது.தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர்களின் கடைசி நேர அறிக்கையால் தியேட்டர் உரிமையாளர்கள் கத்தியை வெளியிட தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.'கத்தி' திரைப்படத்தின் பிரச்சனைகள் குறித்து பேசுவதற்காக நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு கூட்டம் இன்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த கூட்டம் இன்று நடக்கும் என கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள், விநியோகிஸ்தர்கள் ஆகியோர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.இன்று நடக்கவுள்ள கூட்டத்தில், கத்தி படம் வெளியீடு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top