ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'கத்தி' திரைப்படம் தமிழகத்தில் ரிலீஸ் ஆவதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில் விஜய்க்கு ஆதரவாக உதவிக்கரம் கொடுக்க 'ஆம்பள' விஷால் அதிரடி முடிவு ஒன்றை எடுத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
சென்சார் போர்டு அனுமதித்த ஒரு திரைப்படைத்தை வெளியிட முடியாத நிலை சினிமாக்காரர்களுக்கு ஏற்படுகிறது என்றால் அதைவிட கொடுமை வேறு எதுவும் இல்லை என்று கொதித்தெழுந்த விஷால், 'கத்தி'க்கு பிரச்சனை ஏற்படுத்தினால், தனது பூஜை படமும் திரையிடப்பட மாட்டாது' என்று அதிரடியாக கூறியிருக்கின்றாராம்.
ஏற்கனவே திருட்டு டிவிடி மூலம் கேபிள் டிவியில் படத்தை ஒளிபரப்பியவரை கையும் களவுமாக போலீஸில் பிடித்துக்கொடுத்து அதிரடி நடவடிக்கை எடுத்த விஷால், தற்போது கத்தி வெளியாகாவிட்டால் தனக்கு டபுள் லாபம் கிடைக்கும் என்ற நிலை இருந்தும் தனடு சுயநலத்தை மட்டும் பாராமல், விஜய்க்கு ஆதரவாக களத்தில் குதிக்க முடிவு செய்திருக்கின்றார் விஷால்.
மேலும், அவர் விஜய்க்கு ஆதரவாக ரஜினி, கமல், அஜீத், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களும் ஒருங்கே குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சக கலைஞன் ஒருவருக்கு பிரச்சனை என்றால் நாம் எப்படி பார்த்துக்கொண்டு சும்மா இருப்பது என்று பெரிய நடிகர்கள் அனைவரையும் தூண்டி விட்டுள்ளார்.
விஷாலின் முயற்சியால் அஜீத் உள்பட பல நடிகர்கள் இன்று கத்திக்கு ஆதரவாக குரல் கொடுப்பார்கள் என கூறப்படுகிறது.
ஆனால் இன்னொரு விஷயத்தை நாம் எல்லோரும் கவனிக்க வேண்டும். விஷால் பூஜை படத்தின் தயாரிப்பாளர்தான். எனினும் வேந்தர் முவீஸ் கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து தமிழக உரிமையை பெற்றுள்ளது. விஷாலின் இந்த அதிரடி முடிவுக்கு வேந்தர் மூவீஸ் ஒப்புக்கொள்ளுமா? என்று தெரியவில்லை.
எனினும் விஜய்க்கு ஆதரவாக விஷால் கொடுத்த ஆதரவுக்குரல் பாராட்டத்தக்கது. விஜய் ரசிகர்களுக்கும் விஷால் மீது ஒரு பாசம் ஏற்பட்டுவிட்டது. இது ஒரு நல்ல அறிகுறிதான்.

0 comments:
Post a Comment