↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு மோசமான நிலை ஏற்பட்டதற்கு முன்னாள் முதல்வர் பிரித்விராஜ் சவான் தான் காரணம் என்று தேசியவாத காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலின்போது பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் பாஜக 115 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சிவசேனா 60 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நிலைமை மோசமாக உள்ளது. நவநிர்மன் சேனாவின் நிலை படுமோசமாக உள்ளது.
இந்நிலையில் இது குறித்து தேசியவாத காங்கிரஸின் நவாப் மாலிக் செய்தியாளர்களிடம் கூறுகையில், அனைத்திற்கும் சவான் தான் காரணம். அவருக்கு மகாராஷ்டிராவின் பிரச்சனைகள் புரியவில்லை. அவர் சரியான முடிவுகளை எடுக்கவில்லை. செயல்பட வேண்டிய நேரத்தில் அவர் ஒன்றும் செய்யவில்லை. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸின் நிலைமைக்கு அவர் தான் பொறுப்பு என்றார். மகாராஷ்டிராவில் 15 ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தற்போதைய தேர்தலுக்கு முன்பு தான் உடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment