வெள்ளித் திரையில் வீர வசனம் பேசும் ஹீரோக்கள் நிஜ வாழ்க்கை என்று வந்தத பின்பு ஜீரோவாக இருப்பார்கள் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். தனக்குப் பிரச்சனை வரும் போது கூட வாயைத் திறக்காமல் அமைதி காத்துக் கொண்டிருக்கும் அந்த ஹீரோவை அவருடைய ரசிகர்களே ஆச்சரியத்துடன் பார்க்கிறார்களாம். 'ஆசை இருந்தால் மட்டும் போதாது அதற்குரிய தைரியமும் வேண்டும்,' என்கிறார்கள் கோலிவுட்டினர்.
பல கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்பட்ட எளிமையான ஆயுதத்தின் பெயரைக் கொண்ட படம் வெளிவருமா வராதா என்பது இன்னும் சந்தேகமாகவே இருந்து வரும் நிலையில், அவர் தப்பித் தவறிக் கூட எந்தக் கருத்தையும் சொல்லாமல் இருப்பது ஏன் என்பது புரியாத புதிராகவே உள்ளது என்கிறார்கள். கடந்த வருடம் யுனிவர்சல் நாயகன் நடித்த படத்திற்கு பிரச்சனை ஏற்பட்ட போது அவர் களமிறங்கி அவருடைய படத்திற்காகப் போராடியதையும் அதற்கு பல நடிகர்களும் குரல் கொடுத்து கூட சேர்ந்து கொண்டதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
ஆனால், தற்போது சம்பந்தப்பட்ட படத்தின் நாயகனே எந்த குரலையும் கொடுக்காமல் இருக்கும் போது மற்ற நடிகர்கள் எப்படி குரல் கொடுப்பார்கள் என்கிறார்கள். அதோடு ஒரு மலையாள இயக்குனர் இயக்கிய ஒரு படத்திற்கு பிரச்சனை வந்த போது குரல் கொடுத்த மற்ற இயக்குனர்கள் தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது, ஹிந்தித் திரையுலகிலும் தமிழனின் பெருமையை நிலை நாட்டி வரும் ஒரு இயக்குனரின் படத்திற்கு மற்ற இயக்குனர்கள் இதுவரை வாயைத் திறக்காததும் உதவி இயக்குனர்களிடையேயும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாம். தமிழ் உணர்வு பேசும் எந்த ஒரு தமிழ் இயக்குனருமே இன்னொரு தமிழ் இயக்குனருக்காக பரிந்து பேசாததும் அதிர்ச்சியாக உள்ளது என்கிறார்கள்.
நமக்கேன் வம்பு...என அனைவரும் ஒதுங்கிப் போவதில் வேறு பின்னணி காரணம் இருக்கிறது என்கிறார்கள்...
0 comments:
Post a Comment