இன்றைய தேதியில் ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் பரபரப்பாக பேசப்படும் தமிழ் சினிமா பிரபலம் யார் எனக் கேட்டால்... சட்டென்று பிரேம்ஜி அமரனை நோக்கி அத்தனை விரல்களும் நீளும். ஆம்... அவர் நடித்த சினிமா படங்களை விட, அவருடைய ஃபேஸ்புக் வால்களிலும், ட்விட்டர் பக்கங்களிலுமே அதிகப்படியான காமெடிகள் அரங்கேறி வருகின்றன.
அதனை ரசிப்பதற்கென்றே பெரும் ரசிகர் கூட்டமும் இருக்கிறது. அவ்வப்போது பிரேம்ஜி செய்யும் அதகளங்களால் ட்விட்டரில் ட்ரென்டிலும் இருப்பார். அப்படி நேற்று ரொம்பவும் சாதாரணமாக ‘கத்தி’ பிரச்சனை குறித்து அவர் செய்த ஒரு ட்வீட்டால் பல விஜய் ரசிகர்கள் அவரிடம் ‘ட்வீட்’டில் சண்டையிடத் தொடங்கினர்.
நேற்று இரவு சென்னை சத்யம் திரையரங்கம் தாக்கப்பட்ட சம்பவத்தை சினிமா பிஆர்ஓ ஒருவர் படங்களுடன் ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். அதை நடிகர் பிரேம்ஜி ‘ரீட்வீட்’ செய்திருந்தார். இதனைப் பார்த்து கடுப்பான விஜய் ரசிகர்கள், வார்த்தைகளால் அவர்மீது சரமாரி தாக்குதல் நடத்தத் தொடங்கினார்.

ரசிகர்கள் எல்லை மீறவும் பொறுமையிழந்த பிரேம்ஜி அமரன், ‘‘மை டியர் தளபதி ஃபேன்ஸ்... எனக்கு ட்வீட் செய்றதுனாலயும், என்னை டேமேஜ் பண்றதாலயும் ஒரு பிரயோஜனமும் இல்லை... ‘கத்தி’ படத்தோட முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க நானும் ஆவலோடதான் இருக்கேன்... தளபதிக்காக! உங்களுடைய ஆதரவை தியேட்டரில் காட்டுங்க... ட்விட்டர்ல காட்டாதீங்க!’’ என ஒரு ட்வீட் மூலம் பதிலடி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து மேலும் சில ரசிகர்கள் அவர்மீது வசைச் சொற்களை வீசினார்.
ஒரு கட்டத்தில் இதெல்லாம் தேவையில்லாத வேலை என பிரேம்ஜி நினைத்தாரோ என்னவோ கடைசியாக, ‘‘மன்னிச்சுக்குங்க ரசிகர்களே... இன்னைக்கு நைட் ட்விட்டர் டிரென்ட்ல வர எனக்கு விருப்பமில்ல... அதனால இரவு வணக்கம்!’’ என ட்வீட் செய்துவிட்டு கடையை மூடினார்.

0 comments:
Post a Comment