பார்க்கின்ற பெண்கள் அனைவரையும் வசப்படுத்தி தனது வலையில் விழவைக்கும் ப்ளே பாய் ஒருவனுக்கு புத்தி புகட்டும் கேரக்டரில் நடிகை இனியா தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'காதல் சொல்ல நேரமில்லை' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
வாகை சூடவா, மெளன குரு, சென்னையில் ஓர் நாள் போன்ற படங்களில் நடித்த இனியா, பட வாய்ப்புகள் குறைந்ததால் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு 'காதல் சொல்ல நேரமில்லை' படத்தின் மூலம் கிடைத்துள்ளது.
உதய்குமார், இனியா, கஞ்சா கருப்பு, இளையராஜா உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். ஸ்ரீநிவாசன் கதை திரைக்கதை எழுதி இயக்கும் இந்த படத்திற்கு குமார் பாண்டியன் என்பவர் இசையமைக்கிறார். ஸ்ரீசினி கிரியேஷன்ஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தனது படைப்பாக தயாரித்து வருகிறது.
சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கேரளா ஆகிய இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment