↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை' படத்திற்கு சென்சார் போர்டு 'யூ' சர்டிபிகேட் கொடுத்துள்ளதால் அந்த படத்திற்கு வரிவிலக்கு பெறுவதில் எவ்வித சிக்கலும் இல்லாத நிலையில் ஜி.வி.பிரகாஷின் 'டார்லிங்' படத்திற்கு சென்சார் போர்டு 'யூ/ஏ சர்டிபிகேட் வழங்கியுள்ளது. ஏற்கனவே 'டார்லிங்' என தமிழ் மொழி அல்லாத டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாலும், யூ/ஏ சர்டிபிகேட் கிடைத்திருப்பதாலும் இந்த படத்திற்கு தமிழக அரசின் வரிச்சலுகை கிடைக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
வரும் 15ஆம் தேதி தமிழகம் முழுவதும் சுமார் 175 தியேட்டர்களில் 'டார்லிங்' ரிலீஸாவதாக செய்திகள் தெரிவிக்கின்றது. 'டார்லிங்' திரைப்படம் மீடிய பட்ஜெட் படம் என்பதாலும், பொங்கல் நேரத்தில் அதிக தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளதாலும் வரிச்சலுகை கிடைக்காவிட்டாலும், நல்ல லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் திரையுலகம் கணித்துள்ளது.
ஜி.வி.பிரகாஷ், நிகில் குல்கர்ணி, கருணாச், பாலசரவணன் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த திகில் மற்றும் காமெடி திரைப்படத்தை சாம் ஆண்டன் இயக்கியுள்ளார்.
Home
»
»Unlabelled
» காக்கிக்கு கிடைத்த சலுகையை மிஸ் செய்த டார்லிங்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment