கடந்த சில மாதங்களாக 'ஆம்பள' படப்பிடிப்பில் பிசியாக இருந்த ஹன்சிகா இன்று திருப்பதி சென்று ஏழுமலையான் தரிசனம் பெற்ற்றுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஹன்சிகா தன்னுடைய சமூகவலைத்தளத்தில் கூறியதாவது, 'திருப்பதியில் தற்செயலாக நான் நடிக்கும் படம் ஒன்றில் படப்பிடிப்பு நடப்பதால் திருப்பதி சென்றேன்.அங்கு அதிகாலை ஏழுமலையானை தரிசனை செய்து இன்று வெளியாகவுள்ள 'ஆம்பள' படத்தின் வெற்றிக்காக வேண்டிக்கொண்டதாக கூறியுள்ளார்.
திருப்பதி கோவிலின் தரிசனம் தனக்கு மன நிம்மதியை தந்ததாகவும், கடவுளால் நேரடியாக ஆசிர்வதிக்கபட்டது போன்ற ஒரு உணர்வு இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இன்று வெளியாகவுள்ள 'ஆம்பள' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள ஹன்சிகா அடுத்து விஜய்யுடன் 'புலி' மற்றும் ஜெயம் ரவியுடன் 'ரோமியோ ஜூலியட்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
0 comments:
Post a Comment