தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடும் அனைத்துக் கனடிய மக்களுக்கும் எனது மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றி கூறும் விழாவான தைப்பொங்கல் விழாவை நீங்கள் உற்சாகமாக கொண்டாடுவதன் மூலம் செழிப்பான ஒரு வாழ்வை அடைவீர்களென நான் நம்புகின்றேன்.
உலகின் மிக அமைதியான, பன்மைத்துவ நாடுகளில் ஒன்றாக இருக்கும் கனடாவில் அறுவடை விழாவான பொங்கல் விழாவைக் கொண்டாடும் அதிர்ஷ்டமுள்ளவர்கள் நீங்களென நினைவூட்ட விரும்புகின்றோம்.
இவ்வாண்டு இப்பொங்கல் விழாவை கொண்டாடுவதன் மூலம் உங்களின் பெருமைகள் வெளிப்படுவதோடு, நீங்கள் கனடாவிற்கும் மற்றும் கனடிய சமூகத்திற்கும் உங்களின் பங்களிப்பை மிகவும் சிறப்புற ஆற்றுகின்றீர்களென நான் ஆணித்தரமாக நம்புகின்றேன்.
மறக்க முடியாத இந்த நாளில் கனடிய அரசின் சார்பாக என்னுடைய வாழ்த்துக்களை தயவு செய்து ஏற்றுக்கொள்ளுமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.
இப்படிக்கு
மதிப்புக்குரிய கனடிய பிரதமர்
ஸ் ரீபன் காப்பர், P.C, M.P
மதிப்புக்குரிய கனடிய பிரதமர்
ஸ் ரீபன் காப்பர், P.C, M.P
ரோறன்ரோ நகரபிதா ஜோன் டோரி அவர்களின் தை பொங்கல் வாழ்த்து!
Statement from Mayor John Tory wishing the Toronto Tamil community a happy Thai Pongal: “I want to wish you a warm and happy Thai Pongal.
Thai Pongal Vaalthukal. As you gather with your families to celebrate this traditional festival of the end of the harvest season, it’s a great time to appreciate and be thankful for the many blessings we enjoy.
Diversity is one of the reasons why Toronto is such a dynamic city. The Tamil community is part of this, with strong values of family and hard work.
Thank you for the many ways you make Toronto a better city. Best wishes for a wonderful Thai Pongal.”
கனடிய பல்கலாச்சார அமைச்சர் மதிப்புக்குரிய ஜேசன் கெனி அவர்களின் பொங்கல் வாழ்த்துச் செய்தி.
கனடா ஒட்டாவா, தை 14,2015.. மாண்புமிகு பல்கலாச்சார அமைச்சர் ஜேசன் கெனி அவர்கள் தைப்பொங்கல் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை: “இன்று, கனடா, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் “தமிழர்களின் விழா” எனப்படும் அறுவடை விழாவான தைப்பொங்கல் விழாவை இன்று தொடக்கம் நான்கு நாட்களுக்கு கொண்டாடுகின்றார்கள்.
அமோக விளைச்சலை வேண்டி சூரியனுக்கு நன்றி கூறும் ஒரு பாரம்பரிய விழாவாக தைப்பொங்கல் கொண்டாடப் படுகின்றது.
இந்த நான்கு நாட்களும் கொண்டாடப்படுகின்ற ஒவ்வொரு விழாக்களுக்கும் புதுமை, வழமான வாழ்வு, நன்றிக்கடன் மற்றும் குடும்ப வழம் போன்ற சடங்குகளைக் குறித்துக் கொண்டாடப் படுகின்றன.
இத் தைப்பொங்கலோடு தொடர்புடைய விழாக்களான; பழையன கழிதல், சர்க்கரைப் பொங்கல் மற்றும் உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளைக்கு நன்றிகூறும் பட்டிப் பொங்கல் போன்ற நிகழ்வுகள் கொண்டாடப் படுகின்றன.
இந்த நான்கு நாட்களும் குடும்ப நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி மகிழ்ச்சியாக இப்பொங்கல் விழாவைக் கொண்டாடுகின்றார்கள்.
கடந்த 30 ஆண்டுகளாக கனடியத்தமிழர்கள், சிறுபான்மை இனங்களுக்கிடையே மிகவும் வேகமான வளர்சியையுடைய ஒரு சமூகமாகத் திகழ்கின்றார்கள்.
இவ்வேளை கனடியத் தமிழர்கள் கனடாவின் பல்கலாச்சாரத்திற்கு மிகவும் பாரிய ஒரு பங்களிப்பை வழங்கு கின்றார்கள்.
கனடாவின் கலாச்சார அமைச்சர் என்ற முறையில் நானும் எனது மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துக்களை அனைத்து தமிழ் மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன். “தை பிறந்தால் வழி பிறக்கும்”
0 comments:
Post a Comment