உக்ரைனின் கிழக்கு பகுதியில் நேற்று பேருந்து ஒன்றின் மீது ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் நடத்திய துப்பாக்கிசூட்டில் 12 பேர் பலியாகியுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பின் முயற்சியால் ரஷ்யா ஆதரவு பிரிவினைவாதிகளும் உக்ரைன் அரசும் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு முன்வந்தனர்.
ஆனால் உக்ரைன் அரசுக்கு எதிராக மீண்டும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் தாக்குதலை தொடர்ந்து வருகின்றனர்.
இதனால் அங்கு போர் நிறுத்த ஒப்பந்தம் கேள்விக்குறியாக மாறி வருகிறது. இந்நிலையில் கிழக்கு உக்ரைனுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் சாலை, கடல் மற்றும் வான்வழி போக்குவரத்தை உக்ரைன் அரசு தடை செய்தது.
இதைத் தொடர்ந்து, தங்களது வன்முறை தாக்குதல்களை மீண்டும் தொடர்ந்த ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் கிழக்கு உக்ரைனில் டோனட்ஸ்க் (Donetsk) நகரில் நேற்று காலை 32 பேருடன் சென்ற பேருந்தின் மீது துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலில் அந்த பேருந்தின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியதுடன், குழந்தைகள், பெண்கள், ஓட்டுநர் உட்பட 12 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
மேலும் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக உக்ரைன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment